3 நாளைக்கு முன்னாடி அணியில் இணைந்த வீரருக்கு உடனடியாக அறிமுக வாய்ப்பை வழங்கிய – மும்பை இந்தியன்ஸ்

Krish Bhagat
- Advertisement -

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்த அந்த அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுமா? என்ற கேள்வி இருந்ததோடு புள்ளி பட்டியலிலும் பத்தாவது இடத்தை பிடித்திருந்தது. இவ்வேளையில் நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆறாவது லீக் போட்டியில் விளையாடிய மும்பை அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தன.

22 வயது இளம்வீரருக்கு வாய்ப்பளித்த மும்பை இந்தியன்ஸ் :

அப்படி நிகழ்த்தப்பட்ட மாற்றங்களில் சில மாற்றங்கள் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது. அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது ரோகித் சர்மா இடம்பெறாததால் அவருக்கு பதிலாக துவக்க வீரராக விதர்பாவை சேர்ந்த டேனிஷ் மலேவர் என்ற இளம்வீரர் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார்.

- Advertisement -

அதேபோன்று மற்றொரு மாற்றமாக ஷர்துல் தாகூருக்கு பதிலாக 21 வயதான வேகப்பந்து வீச்சாளர் க்ரிஷ் பஹத் என்ற வீரருக்கும் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் குறிப்பாக க்ரிஷ் பகத் என்கிற வீரர் குறித்த சில சுவாரஸ்யமான விடயங்கள் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் 21 வயதான க்ரிஷ் பகத் பஞ்சாப்பை சேர்ந்தவர்.

கடந்த சில ஆண்டுகளாகவே மும்பை இந்தியன்ஸ் அணியில் உதவி பந்துவீச்சாளராக இருந்து வரும் அவர் ஏற்கனவே 2020 அண்டர் 19 உலக கோப்பை இந்திய அணியில் விளையாடிய வீரர் ஆவார். முதல்தர போட்டிகளில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவரால் பேட்டிங்கிலும் கைகொடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அதர்வா அண்ட்கோல்கர் என்பவர் காயம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அணியிலிருந்து நீக்கப்பட்ட வேளையில் அவற்றுக்கு பதிலாக இவர் அணியில் இணைக்கப்பட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : குஜராத் அணிக்கெதிரான போட்டியிலும் ரோஹித் இல்லை.. அவருக்கு பதிலாக அறிமுகமான – 22 வயது இளம்வீரர்

உதவி பந்துவீச்சாளராக வலைப்பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து அவரது திறமையை கவனித்த நிர்வாகம் அவரை 30 லட்சம் என்கிற அடிப்படை தொகைக்கு அணியில் இணைத்ததோடு சேர்த்து அணியில் இணைந்த மூன்றே நாட்களில் அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பையும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement