கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது 14 வயதில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருந்தார். தான் பங்கேற்ற முதல் சீசனிலே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த வைபவ் சூரியவன்சி தொடர்ந்து 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு முன்னர் தூங்கிட்டேன் : வைபவ் சூர்யவன்ஷி
அவரது அதிரடியான ஆட்டம் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்ததோடு தேசிய அணியிலும் அவர் இடம்பெற வேண்டும் என்ற ஆதரவுகளையும் குவித்தது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்று இருக்கும் அவர் முதன்மை துவக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 17 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது இந்த அதிரடியான ஆட்டம் மேலும் அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்து தனது 15-தாவது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்தும் சில கருத்துக்களை அவர் பகிர்ந்து இருந்தார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : எனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ராஜஸ்தான் அணியின் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. 12 மணிக்கு கேக் வெட்டுவதாக அவர்கள் முடிவு செய்திருந்தார்கள். ஆனால் கேக் வெட்டும் போது நிச்சயம் என் முகத்தில் கேக்கை பூசுவார்கள் என்ற பயத்தில் நான் முன்கூட்டியே சென்று தூங்கி விட்டேன். ஆனாலும் அவர்கள் எனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை வெகு சிறப்பாக நடத்தியிருந்தனர்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் எங்களுடைய திட்டம் மிக எளிமையான ஒன்றுதான். அதாவது இதுபோன்ற சிறிய இலக்கினை சேசிங் செய்யும் போது பவர்பிளே ஓவர்களிலேயே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையிலே நான் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். என்னுடைய ஆட்டத்தை பொறுத்தவரை என்னுடைய ஸ்லாட்டில் பந்து இருந்தால் விளாச வேண்டும்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கெதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் வைபவ் சூர்யவன்ஷி – நிகழ்த்திய சாதனை
அப்படி என்னுடைய ரேஞ்சில் இருக்கும் பந்தை நான் அதிரடியாக விளையாடினேன். என்னுடைய இயல்பான ஆட்டத்தை மட்டுமே தான் நான் வெளிப்படுத்தி வருகிறேன். இதுதான் என்னுடைய பேட்டிங் ஸ்டைல் அதிலிருந்து பின்வாங்க விரும்பவில்லை என்றும் வைபவ் சூர்யவன்ஷி கூறியது குறிப்பிடத்தக்கது.



