ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 64-வது லீக் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். இந்த போட்டியின் போது முதலில் விளையாடியிருந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்களை குவித்தது.
ஆண்ட்ரே ரசலை பின்னுக்கு தள்ளிய வைபவ் சூர்யவன்ஷி :
பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்ச வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர் என 93 ரன்கள் குவித்தார்.
அவரது சிறப்பான ஆட்டம் காரணமாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றதால் அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியில் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த வைபவ் சூர்யவன்ஷி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருந்தார். அந்த வகையில் முன்னாள் கொல்கத்தா வீரரான ஆண்ட்ரே ரசலை பின்னுக்கு தள்ளியும் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஐ.பி.எல் தொடரின் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களாக கிறிஸ் கெயில் 59 சிக்சர்களுடன் முதலிடத்திலும், ஆண்ட்ரே ரசல் 52 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தனர்.
இதையும் படிங்க : அதுக்கு அர்த்தம் எல்லாம் கிடையாது.. சும்மா பண்ணேன்.. தனது செலிப்ரேஷன் குறித்து – வைபவ் சூர்யவன்ஷி பதில்
இவ்வேளையில் நேற்றைய போட்டியில் அவர் அடித்த 10 சிக்ஸர்களின் மூலம் 2026 ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 53 சிக்ஸர்களை விளாசி ஆண்ட்ரே ரசலை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திணை பிடித்துள்ளார். மேலும் இந்த தொடரின் லீக் சுற்றுப்போட்டியில் கடைசி ஆட்டம் எஞ்சியுள்ள வேளையில் கிறிஸ் கெயிலையும் முந்த அவருக்கு 7 சிக்ஸர்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.



