ராயல்ஸ் ராயல்ஸ் அணியின் நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி முன்னணி பவுலர்களுக்கு எதிராக ரன் குவித்து வருகிறார். குறிப்பாக பும்ராவிற்கு எதிராக தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸரை அடித்த அவர் ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் பந்துவீச்சிலும் சரமாரியான தாக்குதலை நடத்தியிருந்தார்.
சன் ரைசர்ஸ் பந்துவீச்சாளரை குறிவைத்து அடித்த வைபவ் சூர்யவன்ஷி :
அதேபோன்று நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்க்கு எதிராகவும் அவரது ஓவரில் சிக்ஸரை அடித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இப்படி உலகத்தரம் வாய்ந்த பவுலர்களுக்கு எதிராக அடித்து நொறுக்கி வரும் அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
இவ்வேளையில் வைபவ் சூர்யவன்ஷி கடைசியாக சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற போட்டியின் போது அறிமுக வேகப்பந்து வீச்சாளரான பிரபுல் ஹிங்கே ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதன் காரணமாக நேற்று மீண்டும் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது அவரை சூரியவன்ஷி எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அந்த வகையில் நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற முக்கிய லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்படி நடைபெற்ற போட்டியில் முதல் ஓவரை பிரபுல் ஹிங்கே வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஜெய்ஸ்வால் சிங்கிள் எடுத்து கொடுக்க இரண்டாவது பந்தை ரன் எடுக்காமல் தடுத்து ஆடிய வைபவ் சூரியவன்ஷி கடந்த போட்டியின் போது அவர் ஓவரில் டக் அவுட்டானதை நினைத்து இம்முறை அவரை அடித்து விளையாட வேண்டும் என்ற முடிவுடன் இருந்தார்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் முரளி விஜய்யின் மாபெரும் சாதனையை தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ
அப்படி இரண்டாவது பந்தை தடுத்து ஆடிய அவர் அதன்பின்னர் 3,4,5 மற்றும் 6 என நான்கு பந்துகளையும் தொடர்ச்சியாக சிக்ஸர்களை விளாசி அவருக்கு ரிவென்ஜ் கொடுத்தார். கடந்த போட்டியின் போது தான் ஆட்டமிழந்த அந்த பவுலரை குறி வைத்து இந்த போட்டியில் அவர் அதிரடியான சிக்சர்களை விளாசி பழி தீர்த்தது பலரது மத்தியிலும் கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.



