கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி தான் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது மட்டுமின்றி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான வீரர் என்பது மட்டுமின்றி அதிவேகமாக ஐ.பி.எல் போட்டிகளில் சதம் அடித்த இந்திய வீரராகவும் சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
முரளி விஜய்யின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி :
அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி துவக்க வீரராக விளையாடி வருகிறார். அந்த வகையில் இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்திருந்தார்.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் 37 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர்கள் என 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது இந்த சதம் ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது சதமாக பதிவாகியது மட்டுமின்றி ஏகப்பட்ட சாதனைகளையும் அவருக்கு பெற்று தந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் அடித்த 12 சிக்ஸர்கள் மூலம் முன்னாள் சி.எஸ்.கே வீரரான முரளி விஜய்யின் மாபெரும் சாதனை ஒன்றிணையும் அவர் ஐ.பி.எல் போட்டிகளில் முறியடித்துள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க : முழு உடற்தகுதியை எட்டியும் தோனி சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறாதது ஏன்? – விவரம் இதோ
அந்த வகையில் ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரராக முரளி விஜய் 11 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்தார். கடந்த ஆண்டு இந்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி சமன் செய்த வேளையில் நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 12 சிக்ஸர்களை விளாசி ஐபிஎல் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் தற்போது பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



