முழு உடற்தகுதியை எட்டியும் தோனி சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறாதது ஏன்? – விவரம் இதோ

MS Dhoni
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் ஏழு ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது. இந்த தொடரின் பாதி ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள வேளையில் இனிவரும் ஒவ்வொரு போட்டியும் சென்னை அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. அதனால் சி.எஸ்.கே அணி விளையாடும் போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

எம்.எஸ் தோனி பிளேயிங் லெவனில் இடம்பெறாதது ஏன்? :

இந்த 2026 ஐபிஎல் தொடருக்கான சி.எஸ்.கே அணியில் இடம் பெற்றிருந்த தோனி ஏற்கனவே தீவிர பயிற்சியை மேற்கொண்டிருந்த வேளையில் காயம் காரணமாக இந்த தொடரானது ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக விளையாட முடியாத சூழலை சந்தித்தார். இதன் காரணமாக ஆரம்பகட்ட போட்டிகளில் அவர் விளையாட முடியாது என்று கூறப்பட்டது. இதனால் நிச்சயம் இந்த தொடரின் பிற்பாதியில் அவர் களமிறங்குவார் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக முழு உடற்தகுதியை எட்டிய அவர் மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு தனது கடைசி சீசனில் விளையாடும் தோனி முழு உடற்தகுதியை எட்டியும் இப்படி பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் இருந்து வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவனில் தோனி இடம்பெற்று விளையாடாதது ஏன்? என்பது குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த தொடரின் ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணி தற்போது தான் அணியின் காம்பினேஷனை சரியாக அமைத்து மெல்ல மெல்ல வெற்றி பாதைக்கு திரும்பி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 15 வயதிலேயே உலகின் முதல் வீரராக வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய மாபெரும் சாதனை – விவரம் இதோ

இந்த நேரத்தில் தான் களமிறங்கும் பட்சத்தில் இளம் வீரரின் வாய்ப்பு பறிபோகும் என்பதாலும் அணியின் காம்பினேஷனை மாற்ற வேண்டாம் என்று நினைத்த தோனி அணியில் இடம் பெறாமல் இருந்து வருகிறார். அதோடு விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் விளையாடி வரும் வேளையில் மிடில் ஆர்டரில் கார்த்திக் சர்மா விளையாடி வருகிறார். இப்படி ஒரு நல்ல செட்டான அணியை கலைக்ககூடாது என்பதற்காகவும் தோனி பொறுமை காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement