சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்து ஒன்பதாவது இடத்தை பிடித்து வெளியேறியிருந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய ராஜஸ்தான் அணி :
வரலாற்று சாதனையை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி :
17.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 188 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க வீரரான வைபவ சூர்யவன்ஷி 33 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 57 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக முக்கியமான சாதனை ஒன்றினையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியின் போது 27 பந்துகளை சந்தித்திருந்த வேளையில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 50 ரன்கள் கடந்த அவர் ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஏற்கனவே இந்த ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக அரைசதம் அடித்த அவர் தற்போது சிஎஸ்கே அணிக்கு எதிராக அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த தொடரில் இதுவரை 24 சிக்ஸர்களை அடித்துள்ள அவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே 20 வயதுக்குள் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராகவும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக பிளேயிங் லெவனில் இடம்பிடித்த அவர் தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் தற்போது நிரந்தர இடத்தினை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 போட்டிகளாக சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் கேப்டனாக இடம்பெற்றிருந்தாலும் அவரது இடத்தை சூர்யவன்ஷிக்கு வழங்கி 3 ஆவது இடத்தில் விளையாடி வருகிறார்.
இதையும் படிங்க : 4 இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய தல தோனி – விவரம் இதோ
நடப்பு 2025 ஐ.பி.எல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1 சதம் மற்றும் 2 அரைசதம் என 36 ரன்கள் சராசரியுடன் 206 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 252 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



