4 இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய தல தோனி – விவரம் இதோ

MS Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி டெல்லி அருண் ஜேட்லீ மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62-வது லீக் போட்டியில் பங்கேற்று விளையாடியிருந்தார். இந்த போட்டியின் போது எட்டாவது வீரராக பேட்டிங் செய்ய களமிறங்கிய தோனி 17 பந்துகளை சந்தித்து ஒரு சிக்ஸருடன் 16 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் அடித்த இந்த 1 சிக்சரின் மூலம் தற்போது டி20 கிரிக்கெட்டில் நான்காவது இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அசத்தல் சாதனையை நிகழ்த்திய தல தோனி :

அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது டேவால்டு பிரேவிஸ் ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் களமிறங்கிய தோனி ரியான் பராக் வீசிய ஓவரில் ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை விளாசினார். இதன்மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் 350 சிக்ஸர்களை பூர்த்தி செய்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

ஒட்டு மொத்தமாக டி20 போட்டிகளில் பொருத்தவரை இந்திய வீரராக ரோஹித் சர்மா 542 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 434 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், சூரியகுமார் யாதவ் 368 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.

இவ்வேளையில் நான்காவது இந்திய வீரராக தோனியும் நேற்று அடித்த சிக்ஸர் மூலம் 350 சிக்ஸர்களை பூர்த்தி செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 7628 ரன்களை குவித்துள்ள அவர் 37 ரன்கள் சராசரியுடன், 135 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 28 அரை சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட்டில் 264 சிக்ஸர்களை அடித்துள்ள அவர் கிறிஸ் கெயில் (357), ரோகித் சர்மா (297), விராட் கோலி (290) ஆகியோருக்கு அடுத்து அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற பட்டியலிலும் நான்காவது இடத்தில் உள்ளார். ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை 277 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 38 ரன்கள் சராசரியுடன், 137 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 5439 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வரலாறு காணாத சறுக்கலை சந்திக்க காத்திருக்கும் சி.எஸ்.கே.. நேற்றைய தோல்வியின் மூலம் படைத்த – மோசமான சாதனை

இதில் 24 அரைசதங்கள் அடங்கும். நடப்பு 2025 ஐ.பி.எல் தொடரை பொருத்தவரை இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 12 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் சராசரியுடன் 196 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement