ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாபெரும் ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியானது பிப்ரவரி 6-ஆம் தேதியான இன்று ஹராரே நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இங்கிலாந்து அணியை அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி :
அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த இறுதி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 411 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. இந்திய அணியின் இந்த ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பிரமாண்ட இலக்குடன் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரரான வைபவ் சூர்யவன்சி 80 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரி மற்றும் 15 சிக்ஸர்கள் என 175 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவரது இந்த அதிரடியான ஆட்டம் காரணமாக இந்திய அணி மிகப்பெரிய ரன் குவிப்பை நோக்கி சென்றுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் மிக குறைந்த வயதில் அறிமுகமானது மட்டுமின்றி சதம் அடித்து அசத்தியிருந்த அவர் அடுத்து தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் அசத்தலாக செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க : கடைசி நேரத்தில் டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து விலகிய ஹர்ஷித் ராணா – என்ன நடந்தது?
குறிப்பாக இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் சென்றாலும் அவர் அங்கும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். எனவே அவரை வெகு விரைவில் இந்திய முதன்மை அணிக்கு கொண்டு வர வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



