இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. நாளை பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கும் இந்த தொடர் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வேளையில் இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறது.
இந்திய அணியில் இருந்து விலகிய ஹர்ஷித் ராணா :
சொந்த மண்ணில் நடைபெறும் தொடர் என்பதினால் இம்முறையும் கோப்பையை பற்றி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா கடைசி நேரத்தில் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணிக்காக கடந்த ஓராண்டாகவே மூன்று வகையான போட்டிகளிலும் நம்பிக்கை வீரராக இடம்பெற்று விளையாடி வந்த ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் கலக்குவதோடு மட்டுமின்றி பின் வரிசையில் சற்று பேட்டிங்கும் செய்யக்கூடியவர் என்பதனால் அவருக்கு நிர்வாகம் அதிகளவில் ஆதரவினை வழங்கி வந்தது. அந்தவகையில் அவருக்கு டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணிலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நாளை இந்திய அணி தங்களது முதல் போட்டியில் விளையாட இருக்கின்ற வேளையில் ஹர்ஷித் ராணா காயம் காரணமாக வெளியேறியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பி.சி.சி.ஐ மருத்துவக்குழு கண்காணிப்பில் இருந்தும் அவரது காயம் தற்போது குணமடையாது என்பதனால் இந்த ஒட்டுமொத்த தொடரில் இருந்தே அவர் வெளியேறியுள்ளார்.
இதையும் படிங்க : எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது.. அபிஷேக் சர்மாவின் ஆட்டம் குறித்து பேசிய – ரிஷப் பண்ட்
அதுகுறித்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹர்ஷித் ராணா இப்படி கடைசி வேளையில் அணியில் இருந்து வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வுசெய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.



