எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது.. அபிஷேக் சர்மாவின் ஆட்டம் குறித்து பேசிய – ரிஷப் பண்ட்

Rishabh and Abhishek
- Advertisement -

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட காத்திருக்கிறது. ஏற்கனவே 2024-ஆம் ஆண்டு இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததால் தற்போது நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியானது இம்முறையும் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

அபிஷேக் சர்மாவை எச்சரித்த ரிஷப் பண்ட் :

இந்த டி20 இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படும் இளம் அதிரடி துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா நிச்சயம் இந்த உலகக்கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அந்த அளவிற்கு அவரது பேட்டிங் பார்ம் அற்புதமாக இருந்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் கடந்த 2024-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை தொடர்ந்து மிகச்சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன் காரணமாக இந்த உலகக் கோப்பை தொடரின் முக்கிய வீரராக அவர் திகழ்வார் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடி வந்தாலும் அவரை எச்சரிக்கும் விதமாக இந்திய அணியின் அனுபவ வீரரான ரிஷப் பண்ட் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் சர்மாவின் தற்போதைய பார்ம் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அவர் தொடர்ச்சியாக ரன்களை குவிக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா விளையாடும் டி20 உலககோப்பை போட்டிகளில் எந்த சேனலில் பார்க்கலாம்? – விவரம் இதோ

ஐபிஎல் போட்டிகள் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் அவரால் தொடர்ச்சியாக ரன்களை குவிக்க முடிகிறது. ஆனால் எல்லா நாளும் ஒரே போன்று அமையாது. என்றாவது ஒருநாள் அவர் துவக்கத்திலேயே ஆட்டமிழக்கவும் வாய்ப்பு இருக்கும். எனவே அவர் அழுத்தத்தை எதிர்கொள்ளாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement