இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் எதிர்வரும் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதியான நாளை துவங்கும் இந்த தொடரானது மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டி20 போட்டிகளை எந்த சேனலில் பார்க்கலாம்? :
இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி : பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. லீக் சுற்று போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.
பின்னர் அடுத்தடுத்த சுற்று போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் நிச்சயம் சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான போட்டிகளை எந்த சேனலில் பார்க்கலாம்? ஆன் லைனில் போட்டியை காண விரும்புவோர் எப்படி பார்க்கலாம்? என்பது குறித்த ஒளிபரப்பு தகவல்களை இங்கு காணலாம். அந்த வகையில் இந்த நடப்பு 2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும நிறுவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : இந்திய அணியின் இந்த சக்சஸ்க்கு காரணமே ரோஹித் சர்மாவின் அந்த பார்முலா தான் – ரிஷப் பண்ட் பாராட்டு
இதன் காரணமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் பல்வேறு மொழிகளிலும் இந்த போட்டிகளை கண்டு களிக்கலாம். அதோடு ஆன்லைன் வாயிலாக காண விரும்புவோர் ஜியோ ஹாட்ஸ்டார் வாயிலாக இந்த போட்டிகளை காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



