ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றி அசத்தியது. அதற்கடுத்து தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நடப்பு சாம்பியனாக எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது. ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் பதவியேற்றார்.
ரோஹித் சர்மா தான் சக்சஸ்க்கு காரணம் : ரிஷப் பண்ட் பாராட்டு
அப்படி சூரியகுமார் யாதவின் தலைமையில் விளையாடி வரும் இந்திய அணியானது சொந்த மண் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் டி20 போட்டிகளில் வெற்றிகளை குவித்து வெற்றி நடை போட்டு வருகிறது. அதன் காரணமாக இந்த டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணியே கைப்பற்றும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இதுவரை எந்த ஒரு தொடரையும் இழக்கவில்லை என்பதனால் அவர்களது வெற்றி நடை தொடரும் என்றும் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய டி20 அணி தற்போது மிகச் சிறப்பான பலமான நிலையில் உள்ளதற்கு அடித்தளம் போட்டவரே ரோஹித் சர்மா தான் என ரிஷப் பண்ட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய டி20 அணியானது கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் தோற்றது. ஆனால் அதன் பிறகு நாம் விளையாடும் முறை முற்றிலுமாக மாறியது. குறிப்பாக டி20 போட்டிகளில் அட்டாக் செய்து விளையாட வேண்டும் என ரோகித் சர்மா அடிக்கடி அணி விவாதங்களில் தெரிவிப்பார்.
இதையும் படிங்க : நீங்க டி20 வேர்லடுகப் ஜெயிச்சா உங்களுக்காக நான் இதை பண்றேன்.. சூரியகுமார் யாதவுக்கு – சுனில் கவாஸ்கர் சத்தியம்
அதுமட்டும் இன்றி அதை தானே பொறுப்பேற்று முன் நின்று செய்கிறேன் என்று கூறி அதிரடியாக அணியை மாற்றியவரே ரோகித் சர்மா தான். அதன்பிறகு நமது அணியின் அணுகுமுறையும் மாறியது. இன்று டி20 போட்டிகளில் அசைக்க முடியாத அதிரடி ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்த காரணமே ரோகித் சர்மாவின் பார்முலா தான் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.



