ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் இருந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த அவர் நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற மிக முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 93 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார்.
6 ஆவது அன் கேப்டு வீரராக வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய சாதனை :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த முக்கிய லீக் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 220 ரன்களை குவிக்க பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடுகையில் துவக்க வீரராக களமிறங்கிய சூரியவன்ஷி 38 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர் எனது 93 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்த இன்னிங்சின் மூலம் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருந்தார். அந்த வகையில் நேற்றைய போட்டியில் அவர் அடித்த இந்த 93 ரன்களின் மூலம் ஹென்றிச் கிளாசனை பின்னுக்கு தள்ளி இந்த நடப்பு தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார். அதோடு ஆறாவது இந்திய அன் கேப்டு வீரராக ஒரு மாபெரும் சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்திய அணிக்கு அறிமுகமாகும் முன்னர் ஒரு ஐபிஎல் தொடரில் 500-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த வீரர்களாக இதுவரை யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், பிரப்சிம்ரன் சிங், இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் இருந்தனர்.
இதையும் படிங்க : ஆண்ட்ரே ரசலை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்த வைபவ் சூர்யவன்ஷி – இமாலய சாதனை
இவ்வேளையில் இந்த பட்டியலில் ஆறாவது வீரராக ஒரு ஐபிஎல் சீசனில் 500 ரன்களுக்கு மேல் அடித்து வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளார். இதுவரை இந்த 2026 ஐ.பி.எல் தொடரில் 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 579 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



