சஞ்சு சாம்சன் கொடுத்த பேட்டால் தான் அந்த மேஜிக்கை நிகழ்த்தினேன்.. வைபவ் சூர்யவன்ஷி – அளித்த பேட்டி

Vaibhav and Samson
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது வெறும் 14 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தேர்வான வைபவ் சூர்யவன்ஷி அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அறிமுகமானார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்தியிருந்தார்.

சஞ்சு சாம்சனின் பேட்டால் தான் அந்த மேஜிக் நிகழ்ந்தது : வைபவ் சூர்யவன்ஷி

அதோடு தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸரையும் அடித்து அனைவரையும் பிரமிக்க வைத்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டிகளில் 7 ஆட்டங்களில் விளையாடிய அவர் 36 ரன்கள் சராசரியுடனும் 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 252 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

இதன் காரணமாக அந்த அணியின் எதிர்கால நட்சத்திர வீரராகவும் அவர் பார்க்கப்படுகிறார். அதுமட்டும் இன்றி இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஒரு போட்டியின் போது 35 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர் என தனது முதல் ஐபிஎல் சதத்தையும் பூர்த்தி செய்து அசத்தியிருந்தார். இதன் காரணமாக மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டிகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும், இந்திய வீரராக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் அவர் சமன் செய்திருந்தார்.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேறுகிறார் என்ற தகவல் வெளியானதும் சஞ்சு சாம்சன் உடனான உறவு குறித்து சில சுவாரஸ்யமான கருத்துக்களை வைபவ் சூரியவன்ஷி பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

- Advertisement -

நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட பின்னர் சஞ்சு சாம்சனை எப்போதெல்லாம் பார்க்கின்றேனோ அப்போதெல்லாம் அவரிடம் ஒரு பேட்டை பரிசாக வழங்குமாறு கேட்டுக் கொண்டே இருந்தேன். பின்னர் சில நாட்கள் கழித்து சஞ்சு சாம்சன் எனக்கு ஒரு பேட்டை பரிசாக கொடுத்தார்.

இதையும் படிங்க : இந்தியா சொந்த காசில் சூனியம் வெச்சு தோத்துட்டாங்க.. இந்தியாவில் கடைசி நாளை பாத்ததில்லை.. பவுமா பேட்டி

அவர் கொடுத்த அந்த பேட்டில் தான் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் என்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்தேன். அவர் கொடுத்த பேட் எனக்கு ராசியாக அமைந்தது. சஞ்சு சாம்சன் அண்ணா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறுவது வருத்தம் தான் என்றாலும் அவருடைய பயணம் அடுத்த உயரங்களை அடைய வாழ்த்துக்கள் என்றும் வைபவ் சூர்யவன்ஷி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement