- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சினின் சாதனையை முறியடிக்க வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூட்டு போட்டு குடுக்கும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்சி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது மட்டுமின்றி குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது 35 பந்துகளில் சதம் அடித்தும் அசத்தியிருந்தார். இப்படி தனது அறிமுக சீசனிலே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கான முதன்மை துவக்க வீரருக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சூர்யவன்ஷி :

இந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்தி விளையாடி வரும் வைபவ் சூர்யவன்சி பெரிய அணிகளுக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அடித்து நொறுக்கி வருகிறார். இவரது அதிரடியான ஆட்டத்தை பார்க்கும் பலரும் இவரை இந்திய அணிக்குள் விரைவாக கொண்டுவர வேண்டும் என்று தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அதேவேளையில் முன்னாள் வீரர்கள் பலரும், கிரிக்கெட் நிபுணர்களும் இவரை இந்திய அணிக்காக விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு ஐ.பி.எல் தொடர் முடிந்த கையோடு அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் வாய்ப்பு வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் வெளியான தகவலின் படி : அயர்லாந்து நாட்டிற்கான இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் முதன்மை வீரர்களுடன் வைபவ் சூர்யவன்ஷியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் இந்த தொடரில் அவரது திறமையை சோதிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக அந்த தொடரில் அவருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

- Advertisement -

ஒருவேளை அப்படி அயர்லாந்து தொடரில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானால் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனை ஒன்றினையும் அவர் முறியடிக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக மிக இளம் வயதில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார்.

இதையும் படிங்க : 19 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் முதல் நபராக வரலாற்று சாதனை நிகழ்த்திய – பிரபுல் ஹிங்கே

அவர் தனது 16-வது வயதில் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான வேளையில் தற்போது 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி இந்த அயர்லாந்து தொடரில் அறிமுகமானால் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -