15 வயதிலேயே யுனிவர்ஸ் பாஸ் கிரிஸ் கெயிலின் சாதனையை தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ

Vaibhav Suryavanshi
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது 14 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி இளம் வயதில் ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான வீரர் என்ற வரலாற்று சாதனை நிகழ்த்தினார். அதோடு தான் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு அடித்து உலக கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைத்தார். மேலும் அதே தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது 35 பந்துகளில் சதம் அடித்து ஐ.பி.எல் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தினார்.

கிரிஸ் கெயிலின் சாதனையை தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி :

அதனை தொடர்ந்து தற்போது தனது 15 ஆவது வயதில் 2026 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர துவக்க வீரராகவும் தொடர்ச்சியாக இடம்பெற்று விளையாடி வருகிறார். தொடர்ந்து தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் விரைவில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆதரவும் குவிந்து வருகிறது.

- Advertisement -

கடைசியாக நடைபெற்ற சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் அவர் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்திருந்தார். அந்த வகையில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது 37 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர் என 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்திருந்தார். அந்த போட்டியில் 12 சிக்ஸர்களை அடித்த அவர் ஐபிஎல் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

அதோடு மட்டுமின்றி யுனிவர்ஸ் கிரிஸ் கெயிலின் நீண்ட கால சாதனை ஒன்றினையும் முறியடித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை 15 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 50 சிக்சர்களை அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 50 சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் இமாலய சாதனையை நிகழ்த்திய கிங் கோலி.. வேறலெவல் சார் நீங்க – விவரம் இதோ

இவருக்கு முன்னதாக கிறிஸ் கெயில் 21-வது இன்னிங்ஸ்களில் 50 சிக்ஸர்களை அடித்ததே சாதனையாக இருந்த வேளையில் அவரது சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இன்றி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் அவர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement