ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக அறிமுகமாகி இதுவரை ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரராக வரலாற்று சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார். அதோடு தனது கரியரின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஆர்.சி.பி அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார்.
விராட் கோலி நிகழ்த்திய வரலாற்று சாதனை :
மேலும் அவர் ஓய்வு பெறும் வரை அந்த அணிக்காகவே விளையாடுவேன் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் இளம் வீரர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் தனது மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் முதல் ஏழு ஆட்டங்களிலும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடி இருந்தார். நேற்றைய போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய அவர் 15 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 23 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் ஆர்.சி.பி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது அவர் 11 ரன்களை தொட்ட வேளையில் முதல் நபராக ஐ.பி.எல் போட்டிகளில் 9000 ரன்களை பூர்த்தி செய்ய வீரராக வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். அவருக்கு அடுத்து அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தில் 7,183 ரன்களுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 19 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் மிக மோசமான சாதனைக்கு ஆளான டெல்லி கேபிட்டல்ஸ் – ரொம்ப பரிதாபம்
இவர்கள் இருவருக்கு அடுத்து ஷிகர் தவான், டேவிட் வார்னர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் முறையை மூன்று, நான்கு, ஐந்து ஆகிய இடங்களில் உள்ளனர்.



