கிளென் மேக்ஸ்வெல்லை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனையை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ

Vaibhav Suryavanshi
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக துவக்க வீரராக நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் 15 வயதான இளம் வீரரான வைபவ் சூர்யவன்சி தனது அதிரடியான ரன் குவிப்பின் மூலம் அசத்தி வருகிறார். கடந்த ஆண்டு சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்றுவீரராக அறிமுகமான அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது மட்டுமின்றி குஜராத் அணிக்கு எதிராக சதம் அடித்து மிக இளம் வயதில் ஐபிஎல் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய அசத்தல் சாதனை :

அதோடு இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரிலும் தனது அதிரடியான செயல்பாட்டை தொடர்ந்து வரும் அவர் பும்ராவிற்கு எதிராக தான் சந்தித்த முதல் பந்தியிலேயே சிக்சர் அடித்ததோடு மட்டுமின்றி உலகின் பல்வேறு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

கடந்த சில ஆட்டங்களாகவே அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் அவரது அதிரடியான ஆட்டம் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் கடைசியாக அவர் லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது விளையாடுகையில் 11 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனாலும் அவர் அடித்த அந்த 8 ரன்களின் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 500 ரன்கள் கடந்த வீரராக ஆஸ்திரேலிய வீரரான கிளென் மேக்ஸ்வெல் முதலிடத்தில் இருந்து வந்தார். மேக்ஸ்வெல் 260 பந்துகளில் 500 ரன்களை தொட்டதே சாதனையாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலாக மாற்றுவீரர் அறிவிப்பு.. பேட்ஸ்மேனுக்கு பதிலாக பவுலரா? – விவரம் இதோ

இவ்வேளையில் அந்த சாதனை முறையடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி 222 பந்துகளில் 500 ரன்களை ஐபிஎல் போட்டிகளில் கடந்து அவரது சாதனையை முறியடித்துள்ளார். இந்த நடப்பு 2026 தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவரை இந்திய அணியில் விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என்று பலரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement