ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலாக மாற்றுவீரர் அறிவிப்பு.. பேட்ஸ்மேனுக்கு பதிலாக பவுலரா? – விவரம் இதோ

Ayush Mhatre
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இளம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஆயுஷ் மாத்ரே சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியின் போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அசவுகரியத்தை சந்தித்திருந்தார். அதன் காரணமாக சிகிச்சை மேற்கொண்ட அவருக்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் குணமடைய கிட்டத்தட்ட 12 வாரங்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலாக மாற்றுவீரர் அறிவிப்பு :

இதன் காரணமாக 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து அவர் விலகுவதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சென்னை அணியில் இருந்து வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் அவரது இடத்தில் தற்போது கார்த்திக் சர்மா சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் சென்னை அணியில் இருந்து வெளியேறிய ஆயுஷ் மாத்ரேவிற்கு பதிலாக மாற்று வீரராக யாரை தேர்வு செய்யப்போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு இருந்த வேளையில் தற்போது ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வாலை 35 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகாஷ் மத்வால் ஆர்.சி.பி அணியின் நெட் பவுலராக செயல்பட்ட அவர் பின்னர் 2022 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்றுவீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த தொடரில் 2 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2023 ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். 2024 ஆம் ஆண்டு 5 போட்டிகளில் விளையாடிய அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் சி.எஸ்.கே பேட்ஸ்மேனாக மாபெரும் சாதனையை நிகழ்த்திய சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஆனால் கடந்த ஆண்டுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட அவரை மெகா ஏலத்தின் போது யாரும் தேர்வு செய்யவில்லை. இவ்வேளையில் தற்போது பேட்ஸ்மேனான ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் மத்வாலை சிஎஸ்கே அணி தங்களது அணியில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement