கிறிஸ் கெயிலை தாண்டி இந்த சாதனையை டி20 போட்டிகளில் நிகழ்த்துவேன் – வைபவ் சூர்யவன்ஷி உறுதி

Vaibhav Sooryavanshi
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்சி 14 வயதிலேயே ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமாகி மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரராக சாதனை நிகழ்த்தினார். அதோடு அந்த தொடரில் தான் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸர் அடித்த அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டிகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தினார். இப்படி தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே அவர் அசத்தலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இருந்தார்.

கிரிஸ் கெயிலின் சாதனையை முறியடிக்க ஆசை : வைபவ் சூர்யவன்ஷி

அதோடு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதன்மை துவக்க வீரராக தற்போது விளையாடி வருகிறார். இந்த தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள வேளையில் இந்த சுற்றிலும் வைபவ் சூர்யவன்ஷியின் அசத்தலான ஆட்டம் தொடரும் என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் இந்த பிளே ஆப் சுற்றுக்கு முன்னதாக நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வைபவ் சூர்யவன்சி டி20 போட்டிகளில் தனது இலக்கு என்ன? என்பது குறித்த சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் தொகுத்து வழங்கிய ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட வைபவ் சூர்யவன்சி தனது இலக்கு என்ன? என்பது குறித்து பேசுகையில் கூறியதாவது :

நான் டி20 போட்டிகளில் 200 ரன்கள் எடுக்க விரும்புகிறேன் என்று கூறினார். உடனே இடைமறித்து பேசிய கெவின் பீட்டர்சன் கிறிஸ் கெயில் 175 ரன்கள் அடித்திருப்பதை சுட்டிக்காட்டினார். அப்போதும் தனது முடிவை மாற்றாத வைபவ சூரியவன்ஷி உறுதியுடன் மேலும் கூறியதாவது : ஆம் நான் அவரது சாதனையை முறியடித்து 200 ரன்களை டி20 போட்டிகளில் அடிக்க விரும்புகிறேன். ஒரு டி20 போட்டியில் 20 ஓவர்களும் நான் களத்தில் இருந்தால் நிச்சயமாக அதை சாதித்து காட்டுவேன் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : நிர்வாகம் நெனச்சபடி எதுவும் நடக்கல.. ஹார்டிக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து – கைரன் பொல்லார்டு விமர்சனம்

ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளை பொறுத்த வரை இரண்டு சதம் அடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி அதனை மிகவும் குறைந்த பந்துகளிலேயே அடித்துள்ளார். எனவே நிச்சயம் டி20 போட்டிகளில் அவர் 20 ஓவர்கள் களத்தில் நிற்கும் பட்சத்தில் 200 ரன்களை அடிப்பதற்கு சாத்தியம் உண்டு என்று பலரும் அவரது இந்த கருத்திற்கு தங்களது கமெண்ட்களை பதிலாக பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement