கடந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா அதிரடியாக அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் கொண்டு வரப்பட்ட ஹார்டிக் பாண்டியா மும்பை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் மிகச் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணி அந்த ஆண்டு பத்தாவது இடத்தை பிடித்தது.
ஹார்டிக் பாண்டியாவின் கேப்டன்சியை விமர்சித்த : கைரன் பொல்லார்டு
அதற்கு அடுத்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குவாலிபயர் போட்டி வரை வந்து தோல்வியை சந்தித்தது. இவ்வேளையில் இந்த நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரானது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு படுமோசமான சீசனாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு நடைபெற்ற 2026 ஐபிஎல் தொடரில் மும்பை அணி 14 போட்டிகளில் விளையாடி 10 தோல்விகளை சந்தித்து ஒன்பதாவது இடத்தை பிடித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது.
குறிப்பாக ஹார்டிக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா என நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் மும்பை அணியின் இந்த மோசமான செயல்பாடு பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதோடு இந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி சரியில்லை என்றும் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
இவ்வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கைரன் பொல்லார்டும் ஹார்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து சில முக்கிய கருத்துகளை விமர்சனங்களாக முன்வைத்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஹார்டிக் பாண்டியாவை பொறுத்தவரை கேப்டன் என்ற முறையிலும், தனிப்பட்ட வீரர் என்ற முறையிலும் அவர் விரும்பிய அளவுக்கு இந்த சீசன் சிறப்பாக அமையவில்லை. நிர்வாக குழுவாக நாங்கள் விரும்பியதும் இந்த சீசனில் நடக்கவில்லை.
இதையும் படிங்க : இந்த ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்க அந்த அணிக்கு சேன்ஸ் அதிகம் – அக்சர் படேல் கருத்து
இந்த அணியை சிறப்பாக வழிநடத்த நாங்கள் எல்லா வாய்ப்பையும் வழங்க முயற்சித்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இந்த சீசனை முழுமையாக ஆய்வு செய்த பிறகு அணியின் எதிர்காலம் மற்றும் சாத்திய மாற்றங்கள் குறித்த விவாதங்கள் விரைவில் அணிக்கு உள்ளே நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹார்திக் பாண்டியா நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.



