இந்த ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்க அந்த அணிக்கு சேன்ஸ் அதிகம் – அக்சர் படேல் கருத்து

Axar Patel IPL
- Advertisement -

கடந்த மார்ச் 28-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 2026-ஆம் ஆண்டிற்கான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் நிறைவடைய இருக்கிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்த ஆண்டு சாம்பியன் இவங்கதான் : அக்சர் படேல் கணிப்பு

இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் பிளே ஆப் சுற்று போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் இந்த 2026 ஐ.பி.எல் தொடரின் இறுதிவரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் விளையாடி முடித்த பின்னர் டெல்லி அணியின் கேப்டனான அக்சர் பட்டேலிடம் இந்த ஆண்டு எந்த அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது? ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அக்சர் பட்டேல் தனது கணிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த ஆண்டு என்னை பொறுத்தவரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கோப்பையை வெல்ல சாதகம் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அந்த அணியின் டாப் 3 வீரர்கள் தொடர்ச்சியாக ரன் குவித்து வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவது மிக கடினம் எனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தடுத்து நிறுத்துவது கடினம் என்று தோன்றுவதாக அக்சர் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ரிங்கு சிங்கின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் குல்தீப் யாதவ் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

அவர் கூறியது போன்றே சன் ரைசர்ஸ் அணி சார்பாக அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் கிளாஸன் ஆகியோர் மிகச்சிறப்பாக ரன் குவித்து வருகின்றனர். அதேபோன்று அந்த அணியின் மற்றொரு துவக்க வீரரான டிராவிஸ் ஹெட்டும் அதிரடியாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement