உங்களுக்கு தைரியம் கொஞ்சம் ஜாஸ்தி தான். நீங்க விளையாடுன மாதிரி தான் – உத்தப்பாவை கலாய்க்கும் ரசிகர்கள்

robin

இந்தியாவில் ஐபிஎல் தொடர் போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. ரசிகர்களின் தொடர் ஆதரவால் ஆண்டுதோறும் பலத்த எதிர்பார்ப்போடு துவங்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்கு இந்த ஆண்டும் அமோக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 13 ஆவது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறுகிறது.

Kkr

இந்நிலையில் இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ராபின் உத்தப்பா கழட்டி விடப்பட்டு உள்ளார். அதனால் ராபின் உத்தப்பா தற்போது ஏலத்தில் பங்கேற்க உள்ளார் மேலும் அவருக்கு அடிப்படை தொகையாக ஐபிஎல் நிர்வாகம் ஒரு கோடியை நிர்ணயித்துள்ளது. ஆனால் ராபின் உத்தப்பா தனது அடிப்படை விலையை ஒன்றரை கோடியாக நிர்ணயம் செய்து அதிரடி காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக 12 போட்டிகளில் விளையாடிய உத்தப்பா 282 ரன்கள் அடித்தார். அவரது பேட்டிங் சராசரி 31 ரன்கள் இருந்தாலும் ஸ்ட்ரைக் ரேட் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. டி20 போட்டிகளில் அதிரடியாக ரன் குவிப்பது தான் முக்கியம் என்பதால் ராபின் உத்தப்பா ஒன்றரை கோடிக்கு மேல் எந்த அணியும் எடுப்பது சற்று சந்தேகம் தான். மேலும் இதனை இணையத்தில் கண்ட ரசிகர்கள் நீங்கள் ஐபிஎல் போட்டிகளிலும் அதிரடியாக விளையாட வில்லை.

kkr

உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை போதாதற்கு வயது ஆகிவிட்டது உங்களை எந்த அணியில் ஏலம் எடுப்பார்கள். ஏன் இப்படி செய்தீர்கள் என்பது போல தங்களது கருத்துக்களை பதிவிட்டு கிண்டல் செய்து வருகின்றனர். ஏலத்தில் எந்த அணியும் அவரை தேர்வு செய்ய முன்வரவில்லை என்றால் அவர் இந்த வருடம் விளையாடாமல் போகக்கூட வாய்ப்புள்ளது.

- Advertisement -