இந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியில் விளையாடி இந்த சாதனையை படைக்க ஆசை – உத்தப்பா விருப்பம்

uthappa
- Advertisement -

ஐபிஎல் தொடர் ஆரம்பம் முதலே விளையாடி வரும் ராபின் உத்தப்பா முதல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2008ஆம் ஆண்டு ஆடினார். அதன்பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 2009 முதல் 2010 வரை ஆடினார். அதன் பின்னர் புனே வாரியர்ஸ் அணிக்காக 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை விளையாடினார். அதன் பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2014 தொடங்கி 2019 வரை விளையாடினார்.

Uthappa

- Advertisement -

சென்ற ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ராபின் உத்தப்பா இந்த ஆண்டு சென்னை அணிக்காக களம் இறங்க உள்ளார். இந்நிலையில் சென்னை அணியில் ஆடப் போவது குறித்து மற்றும் தனது விருப்பங்களை பற்றி ராபின் உத்தப்பா அண்மையில் பேசியுள்ளார். அது குறித்து அவர் கூறுகையில் : தற்பொழுது மும்பையில் சென்னை அணியுடன் இணைந்து வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ராபின் உத்தப்பா, சென்னை அணிக்காக விளையாட மிக ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

மிக சிறந்த வகையில் தன்னை தயார்படுத்திக் கொண்டு வருவதாகவும், நடக்கவுள்ள ஐபிஎல் தொடரை சென்னை அணிக்காக நன்றாக விளையாடி இறுதிவரை அணியை கொண்டு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள மிக ஆவலாக உள்ளேன் என்று கூறியிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு சாம்பியன் அணி என்றும் அதை எதிர்கொண்டு வெல்வது மிகப்பெரிய விஷயம் என்றும் கூறியிருக்கிறார்.

uthappa 1

மும்பை அணியை எதிர்கொண்டு, தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை அணியை வீழ்த்த உள்ளதாக ராபின் உத்தப்பா கூறியுள்ளார். மேலும் பேசிய ராபின் உத்தப்பா, ஒரு ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக ஆயிரம் ரன்கள் அடிப்பது தன்னுடைய ஆசை என்று குறிப்பிட்டுள்ளார். விராட் கோலி அடித்த 973 ரன்கள்தான் ஒரு தொடரில் தனிநபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

uthappa 1

ராபின் உத்தப்பா தற்பொழுது ஆயிரம் ரன்கள் அடிப்பது தன்னுடைய கனவு என்று கூறியிருக்கும் நிலையில், ஒருவேளை உத்தப்பா 1000 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் விராட் கோலியின் சாதனையை முறியடிக்கபடும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் உத்தப்பா 2014ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக, அந்த வருடம் 660 ரன்கள் அடித்தார். மேலும் அந்த வருடத்திற்கான ஆரஞ்சு கோப்பையையும் உத்தப்பபாவே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement