IND vs AUS : அவர் ஒரு GUN பவுலர். அவருக்கு எதிரா நாம ஜாக்கிரதையா தான் இருக்கனும் – உஸ்மான் கவாஜா கருத்து

Khawaja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் இந்த டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு கருத்துக்களை இரு அணி வீரர்களும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

IND-vs-AUS

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியின் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுஷேன் போன்றோர் இந்த இந்திய தொடரில் தங்களுக்கு சவாலாக அமையப்போகும் விடயம் எது என்பது குறித்து பேசியிருந்த வேளையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான உஸ்மான் கவாஜா இந்த தொடரில் சந்திக்கப்போகும் சவால் குறித்து பேசியுள்ளார்.

அப்படி இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினை எதிர்கொள்ள நிச்சயம் பெரிய அளவில் போராட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Marnus Labuschange Ravichandran Ashwin

அஷ்வின் ஒரு கன் பவுலர். மேலும் அதுமட்டும் இன்றி அவருடைய பந்துவீச்சில் ஏகப்பட்ட ஸ்கில்ஸ் இருக்கின்றன. அதுவும் இந்திய மண்ணில் அவரது பந்துவீச்சு எங்களது அணியின் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும். நான் இளம் வயதில் இருந்த போது ஸ்பின்னர்களுக்கு எதிராக எப்படி விளையாட போகிறேன் என்று கேட்டால் எந்த பதிலும் இருந்திருக்காது.

- Advertisement -

ஆனால் தற்போது சுழற்பந்து வீச்சாளர்களை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து கொண்ட அனுபவம் இருக்கிறது. இருந்தாலும் இந்திய மண்ணில் அஸ்வின் போன்ற ஒரு தரமான பந்துவீச்சாளரை எதிர்கொள்ளும் போது அதிக அளவில் சவால்கள் இருக்கும். ஏனெனில் அஸ்வின் ஒரு பேட்ஸ்மேன் நீண்ட நேரம் களத்தில் நின்று விட்டால் அவருக்கு எதிராக திட்டங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்.

இதையும் படிங்க : ஓடி எடுக்கும் விராட் கோலியை விட டைமிங்கில் அசத்தும் ரோஹித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் – முன்னாள் பாக் வீரர் பேட்டி

ஒரே மாதிரி பந்துகளை அவர் அனைத்து ஓவர்களிலும் வீசவே மாட்டார். புதுப்புது விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் அவர் நிச்சயம் உங்களுக்கு எதிராக தனது அனைத்து திறன்களையும் பயன்படுத்துவார். எனவே அவரை இந்த தொடரில் சமாளிப்பது கடினமான ஒன்று உஸ்மான் கவாஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement