- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எல்லா இந்திய பவுலர்களும் எனக்கு அத்துப்படி.. பும்ராவை அடிக்க இந்த பிளான் வெச்சுருக்கேன்.. கவாஜா பேட்டி

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் 4 வெற்றிகளைப் பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் நோக்கத்துடன் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா பெரிய சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உண்மையிலேயே வித்தியாசமான பவுலிங் ஆக்சன் காரணமாக பும்ரா மிகவும் சவாலான பவுலர் என்று ஆஸ்திரேலிய துவக்க வீரர் உஸ்மான் கவாஜா கூறியுள்ளார். இருப்பினும் அவர் உட்பட மற்ற இந்திய பவுலர்கள் பற்றி தாம் தெரிந்து வைத்துள்ளதாகவும் கவாஜா கூறியுள்ளார். மேலும் பும்ராவை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடுவதற்கு தேவையான திட்டம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

தரமான பும்ரா:

அது பற்றி கவாஜா பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ராவை முதல் முறையாக எதிர்கொண்ட போது அவருடைய விசித்திரமான ஆக்சன் காரணமாக வித்தியாசமாக இருந்தது. மற்ற பவுலர்களை காட்டிலும் அவருடைய பந்து ரிலீஸ் செய்யும் இடம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. பெரும்பாலான பவுலர்கள் வெள்ளைக் கோட்டுக்கு அருகே பந்தை வெளியிடுவார்கள். ஆனால் அவர் இன்னும் கொஞ்சம் முன்னதாக பந்தை வெளியிடுகிறார்”

“அதனால் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அவர் வீசும் பந்துகள் மிகவும் வேகமாக வருவது போல் உணர முடியும். இருப்பினும் அவருடைய பந்துகளை எதிர்கொண்டு பழகி விட்டால் அது நன்றாக ஆகிவிடும். அவருக்கு எதிராக நான் நிறைய விளையாடியுள்ளேன். அவர் என்னை முதல் பந்திலேயே அவுட்டாக்க முடியாது என்று சொல்ல மாட்டேன். யார் வேண்டுமானாலும் என்னை முதல் பந்தில் அவுட்டாக்க முடியும்”

- Advertisement -

கவாஜா திட்டம்:

“ஆனாலும் அவரை நீங்கள் முதல் முறையாக எதிர்கொள்ளும் போது கொஞ்சம் விசித்திரமாக இருக்கும். இருப்பினும் அவர் கிளாஸ் நிறைந்த பவுலர். ஷமியும் இடது வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மிகவும் சிறந்த பவுலர். அவர் குணமடைந்து விளையாடும் போது இந்த தொடரில் சிறந்த பவுலராக செயல்படுவார். அவர் மிகவும் அண்டர்ரேட்டட் பவுலர். அவரைப் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை”

இதையும் படிங்க: ரோஹித், கோலிக்கு ஆஸ்திரேலியா சொந்த ஊர் மாதிரி இருக்கும்.. இதை செய்ங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் அட்வைஸ்

“பின்னர் இந்தியனிடம் நல்ல ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். எனவே பும்ராவை பற்றி மட்டும் நான் நினைக்கவில்லை. அவருக்கு எதிராக எப்படி ரன்கள் அடிக்க வேண்டும் என்பதை பற்றி நினைக்கிறேன். ஒருவேளை அவர் நன்றாக பந்து வீசினால் அதை நான் மதித்து விளையாடுவேன். சரியாக பந்து வீசவில்லையெனில் அடித்து ரன்களை குவிப்பேன். எனவே அது நல்ல டெஸ்ட் கிரிக்கெட்டாக இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -