ரோஹித், கோலிக்கு ஆஸ்திரேலியா சொந்த ஊர் மாதிரி இருக்கும்.. இதை செய்ங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் அட்வைஸ்

Sanjay Manjrekar
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது. ஏனெனில் நம்பிக்கை நட்சத்திரங்களான அவர்கள் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் சுமாராக விளையாடி இந்தியாவின் சரித்திர தோல்விக்கு முக்கிய காரணமானவர்கள்.

இந்நிலையில் இந்தியாவை விட ஆஸ்திரேலியாவை தான் அவர்கள் தங்களுடைய சொந்த ஊர் போல உணர்வார்கள் என்று முன்னாள் வீரர் சஞ்சய் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்காது என்று அவர் கூறியுள்ளார். அங்கே விராட் கோலி, ரோஹித் சர்மாவும் சிறப்பாக விளையாடுவதற்கு தேவையான ஆலோசனை பற்றி அவர் தெரிவித்தது பின்வருமாறு.

- Advertisement -

சொந்த ஊர் ஆஸ்திரேலியா:

“விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் சொந்த மண்ணுக்கு வெளியே சொந்த ஊரில் விளையாடுகிறோம் என்று நினைப்பார்கள். ஏனெனில் அவர்கள் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் மிகவும் தடுமாறினார்கள். ஆனால் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை எதிர்கொள்வது ரோஹித் சர்மாவுக்கு பிரச்சினையாக இருக்காது. அதே போல வேகம் நிறைந்த தென்னாப்பிரிக்காவில் கடைசியாக விளையாடிய தொடரில் விராட் கோலி இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டார்”

“எனவே அவர்களுக்கு ஆஸ்திரேலியா சொந்த மண்ணுக்கு வெளியே உள்ள சொந்த ஊராகும். முதல் போட்டியில் ரோகித் சர்மா இல்லாததால் இந்திய அணி கொஞ்சம் பின்னடைவை சந்திக்கலாம். விராட் கோலி தமக்கு எதிராக ஆஸ்திரேலியா என்ன திட்டத்துடன் வரும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருப்பார். கண்டிப்பாக அவருக்கு எதிராக ஆஸ்திரேலியா அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பகுதியில் பந்து வீச முயற்சிப்பார்கள்”

- Advertisement -

கோலிக்கு அட்வைஸ்:

“இருப்பினும் இப்போதெல்லாம் விராட் கோலி அந்த இடத்தில் வரும் பந்துகளை அடிக்காமல் விட பார்க்கிறார். அதற்கு உள்ளே வந்தால் விராட் கோலி டிரைவ் அடிக்க முயற்சிப்பார். இப்போதெல்லாம் விராட் கோலியின் உடலை அட்டாக் செய்யும் வகையில் எதிரணியினர் பந்து வீசுகிறார்கள். ஏனெனில் அந்தப் பகுதியில் வரும் பந்துகளை விராட் கோலி அடிக்க விரும்புகிறார்”

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் நல்லா ஆடணும்னா இதை பண்ணுங்க போதும்.. ரோஹித் சர்மாவிற்கு – கவாஸ்கர் அட்வைஸ்

“சமீபத்தில் நியூசிலாந்து அணியும் அதை சாதுரியமாக செய்தது. எனவே இந்த திட்டங்களுடன் ஆஸ்திரேலியா வருவார்கள். விராட் கோலி அது பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார். அதாவது அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை விராட் கோலி கவர் டிரைவ் அடிக்க முயற்சிக்காமல் தவற விட வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் காத்திருந்து சுமாரான பந்துகளை அடித்தால் விராட் கோலி அசத்த முடியும் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement