- Advertisement -
இந்திய கிரிக்கெட்

654 ரன்ஸ்.. இலங்கை புரட்டிய ஆஸி.. சச்சினை முந்திய கவாஜா சாதனை.. இங்லீஷ் 90 பந்தில் அதிரடி சாதனை

இலங்கை மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி கால்லே நகரில் ஜனவரி 29ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 57 (40) ரன்கள் குவித்து அவுட்டானார்.

அவருடன் விளையாடிய உஸ்மான் கவாஜா நிதானமாக ரன்கள் குவித்தார். அடுத்ததாக வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 20 ரன்களில் அவுட்டானாலும் அடுத்து வந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 10000 ரன்கள் கடந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்த கவாஜா சதத்தை அடித்து தொடர்ந்து நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

புரட்டிய ஆஸ்திரேலியா:

நேரம் செல்ல செல்ல இலங்கை பவுலர்களை திணறடிக்க வைத்த அந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 266 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. அதில் தொடர்ந்து நேர்த்தியாக விளையாடிய ஸ்மித் தன்னுடைய 35வது சதத்தை அடித்து 141 ரன்கள் விளாசி அவுட்டானார். அதற்கடுத்ததாக அறிமுக வீரர் ஜோஸ் இங்லிஷ் களமிறங்கி அதிரடியாக விளையாடினார்.

அவருடன் சேர்ந்து மறுபுறம் நங்கூரமாக விளையாடிய கவாஜா தனது முதல் இரட்டை சதத்தை அடித்து 232 ரன்கள் விளாசி அவுட்டானார். இதன் வாயிலாக இலங்கை மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். இது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் அதிக வயதில் (38 வருடம் 42 நாட்கள்) இரட்டை சதத்தை அடித்த வீரர் என்ற சச்சின் சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

இலங்கை திணறல்:

இதற்கு முன் சச்சின் 2010ஆம் ஆண்டு 37 வருடம் 93 நாட்களில் அடித்ததே முந்தைய சாதனை. அவருக்குப்பின் அதிரடியாக விளையாடிய ஜோஸ் இங்லிஷ் 90 பந்துகளில் சதத்தை அடித்து 102 (94) ரன்களில் அவுட்டானார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அறிமுக போட்டியிலேயே 2வது வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் 2003ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ட்வயன் ஸ்மித் 93 பந்துகளில் 100 ரன்கள் அடித்தது முந்தைய சாதனை.

இதையும் படிங்க: அக்கறைலாம் ஒன்னுமில்ல.. அதுக்கு பயந்து தான் ரோஹித், கோலி இதை செஞ்சுருக்காங்க.. ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

இறுதியில் அலெக்ஸ் கேரி 46*, வெப்ஸ்டர் 23, ஸ்டார்க் 19* ரன்கள் எடுத்த உதவியுடன் ஆஸ்திரேலியா 654-6 ரன்களில் தங்களுடைய முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இலங்கைக்கு ஜெயசூர்யா 3, வேண்டர்சே 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடும் இலங்கைக்கு பெர்னாண்டோ 7, கருணரத்னே 7, மேத்தியூஸ் 7 ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 2வது நாளில் 44-3 என திணறும் இலங்கைக்கு களத்தில் சந்திமல் 9*, கமிண்டு மெண்டிஸ் 13* ரன்களுடன் உள்ளார்கள்.

- Advertisement -