வீடியோ : கவாஜா வெறித்தனம் – தப்பு பண்ணிட்டீங்களே இங்கிலாந்து, பழைய ஸ்டைலில் திருப்பி அடிக்கும் ஆஸி

Usman Khawaja
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கியுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜூன் 16ஆம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அதிரடியாக செயல்பட்டு 393/8 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே டிக்ளர் செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 ஆட்டத்தை வெளிப்படுத்தி கடந்த வருடம் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளை அடித்து நொறுக்கியது போலவே இம்முறை உங்களை அடிப்போம் என ஆஸ்திரேலியாவை ஆரம்பத்திலேயே எச்சரித்த இங்கிலாந்து வாயில் சொன்னதை செயலில் காட்டி தைரியமாக டிக்ளரும் செய்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 61 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 78 ரன்களும் எடுக்க நம்பிக்கை நாயகன் ஜோ ரூட் 30 வது சதமடித்து 118* ரன்கள் குவித்தார். அதே போல ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னரை 9 ரன்களில் தமது கேரியரில் 15வது முறையாக அவுட்டாக்கிய ஸ்டுவர்ட் பிராட் அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேனையும் கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் பதிலடி:
அதனால் 29/2 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணிக்கு நங்கூரத்தை போட முயன்ற ஸ்டீவ் ஸ்மித்தும் 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவுடன் அடுத்ததாக களமிறங்கி 4வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த டிராவிஸ் ஹெட் 50 ரன்கள் குவித்து அவுட்டாக அடுத்து வந்த கேமரூன் கிரீன் 5வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மொய்ன் அலி சுழலில் 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

ஆனால் அந்த இருவருடன் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக நின்று அரை சதம் கடந்த அசத்திய உஸ்மான் கவஜான் நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி இங்கிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 15வது சதமடித்தார். குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் முதல் முறையாக சதமடித்து ஆஸ்திரேலியாவை 300 ரன்கள் தாண்ட வைத்து காப்பாற்றிய அவர் தன்னுடைய பேட்டை காற்றில் தூக்கி எறிந்து வெறித்தனமாக கொண்டாடியது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து அவருடன் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி தன்னுடைய பங்கிற்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 2வது நாள் முடிவில் 311/5 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா இன்னும் 82 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளது. அந்த அணிக்கு கைவசம் இன்னும் 5 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் களத்தில் கவாஜா 126* அலெக்ஸ் கேரி 52* ரன்களுடன் இருக்கிறார்கள்.

அதன் காரணமாக எப்படியும் இன்னும் 82 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை விட 1 ரன்னையாவது ஆஸ்திரேலியா முன்னிலையாக பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆஸ்திரேலியாவை அச்சுறுத்துவதற்காக எடுத்த தைரியமான டிக்ளர் முடிவு இங்கிலாந்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது அந்நாட்டு ரசிகர்களை கலக்கமடைய வைக்கிறது.

இதையும் படிங்க:இனிமே அவங்க 2 பேர் மேலயும் அதிகளவு பிரஷர் இருக்கும். பி.சி.சி.ஐ அவங்கள கட்டம் கட்டிட்டாங்க – வாசிம் ஜாபர் கருத்து

மறுபுறம் உங்களையும் அடிப்போம் என்று எச்சரித்த இங்கிலாந்துக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து சாம்பியனாக களமிறங்கிய ஆஸ்திரேலியா பழைய மெதுவான பேட்டிங் ஸ்டைலை பின்பற்றி பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக உங்களுடைய ஆட்டமெல்லாம் பாகிஸ்தான் போன்ற அணிகளிடம் வைத்துக் கொள்ளுங்கள் தரமான பவுலிங் கொண்ட எங்களிடம் செல்லுபடியாகாது என்று ஏற்கனவே எச்சரித்திருந்த ஆஸ்திரேலியா தற்போது அதை செயலில் காட்டத் துவங்கியுள்ளது. அதன் காரணமாக இந்த போட்டியில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement