2 ஆண்டு போராட்டம்.. ஒருவழியாக ஓய்வை அறிவித்த உஸ்மான் கவாஜா – விவரம் இதோ

Usman Khawaja
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வேளையில் எதிர்வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட் பை சொன்ன உஸ்மான் கவாஜா :

அவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பின் காரணமாக எதிர்வரும் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான உஸ்மான் கவாஜா இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 சதம் மற்றும் 28 அரைசதம் என 6206 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

அதுதவிர்த்து 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 சதம் மற்றும் 12 அரைசதம் என 1554 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு அரைசதத்துடன் 241 ரன்களை குவித்துள்ளார். இப்படி 3 வகையான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 8001 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்காக குவித்துள்ளார்.

தற்போது 39 வயதாகும் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக தடுமாறி வருகிறார். இதன் காரணமாக துவக்க வீரருக்கான தனது இடத்தினை இழந்த அவர் மிடில் ஆர்டரில் விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரிலும் 5 இன்னிங்ஸ்சில் வெறும் 153 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக அவரது பேட்டிங் பார்ம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் அடுத்ததாக விளையாட இருக்கும் 88-ஆவது டெஸ்ட் போட்டியுடன் அவர் அறிமுகமான அதே சிட்னி மைதானத்தில் விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அவமானப் படுத்துனாங்க.. 8 மாசத்தில் கோச் பதவியை ராஜினாமா செய்தது பற்றி.. கில்லஸ்பி

இதுகுறித்து உஸ்மான் கவாஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது : சர்வதேச போட்டிகளில் இருந்து நான் ஓய்வுபெற உள்ளேன். சிட்னி டெஸ்ட் தான் எனது கடைசி டெஸ்ட் என பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி செய்தார். ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற அணியிலும் அவர் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement