பாகிஸ்தான் அவமானப் படுத்துனாங்க.. 8 மாசத்தில் கோச் பதவியை ராஜினாமா செய்தது பற்றி.. கில்லஸ்பி

Jason Gillespie
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2022, 2024 டி20 உலகக் கோப்பைகளில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக் குட்டிகளிடம் பாபர் அசாம் தலைமையில் தோற்றது. மேலும் இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. அதே போல சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல் பாகிஸ்தான் திண்டாடியது.

அதனால் 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவிய கேரி கிர்ஸ்டனை பாகிஸ்தான் தங்களுடைய வெள்ளைப்பந்து அணிகளின் பயிற்சியாளராக நியமித்தது. அதே போல ஆஸ்திரேலியாவின் ஜேசன் கில்லஸ்பி பாகிஸ்தான் டெஸ்ட் அணியும் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். இருப்பினும் அவர்களுடைய வழி காட்டுதலிலும் பாகிஸ்தான் எதிர்பார்த்த வெற்றிப் பாதைக்கு திரும்பவில்லை.

- Advertisement -

அவமானப்படுத்திய பாகிஸ்தான்:

இதற்கிடையே பயிற்சியாளர்களிடம் கலந்து பேசாமலேயே பாகிஸ்தான் அணி தேர்வு செய்யப்படுவதாக செய்திகள் வெளியானது. அதனால் பாகிஸ்தான் வாரியம் மீது கிர்ஸ்டன், கில்லஸ்பி அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவித்தன. அதை உறுதியாக்கும் வகையில் அடுத்த சில வாரங்களில் ஜேசன் கில்லஸ்பி பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அடுத்த சில மாதங்களில் கேரி கிரிஸ்டனும் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்து சில மாதங்கள் கழித்து பயிற்சியாளராக செயல்பட்டதற்கான சம்பள பாக்கியைப் பாகிஸ்தான் வாரியம் வழங்கவில்லை என்று ஜேசன் கில்லஸ்பி விமர்சித்திருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவியை 8 மாதத்தில் ராஜினாமா செய்தது ஏன்? என்று அவரிடம் ட்விட்டர் பக்கத்தில் ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

வெளியேறிய கில்லஸ்பி:

அதற்கு தம்முடைய துணைப் பயிற்சியாளர் டிம் நெய்ல்சனை பாகிஸ்தான் வாரியம் தமக்குத் தெரியாமலேயே பதவியிலிருந்து நீக்கியதாக கில்லஸ்பி பதிலளித்துள்ளார். அந்த வகையில் பல்வேறு விஷயங்களில் பாகிஸ்தான் வாரியம் தம்மை அவமானப்படுத்தியதாலயே பதவியை ராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் கொடுத்துள்ள பதில் பின்வருமாறு.

இதையும் படிங்க: 2026 புத்தாண்டில் இந்தியாவுக்காக விராட், ரோஹித் விளையாடும் ஒருநாள் போட்டிகள் எத்தனை? விவரம் இதோ

“பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட்டு கொண்டிருந்தேன். அப்போது பாகிஸ்தான் வாரியம் என்னை தொடர்பு கொள்ளாமலேயே எங்களுடைய மூத்த துணைப் பயிற்சியாளரை பதவி நீக்கம் செய்தது. ஒரு பயிற்சியாளராக அது ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை என்பதை நான் கண்டறிந்தேன். அதே போல நிறைய பிரச்சனைகள் இருந்தது. அது என்னை முழுமையாக அவமானப்படுத்தியது” என்று கூறினார்.

Advertisement