உலகம் முழுவதிலும் 2026 ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்த வருடம் இந்திய அணி கிரிக்கெட்டில் பல வெற்றிகளைக் குவித்து சாதனைகளைப் படைக்க தயாராகி வருகின்றது. இந்த நிலையில் 2026 புத்தாண்டில் இந்திய அணிக்காக நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாட உள்ள போட்டிகளின் விபரங்களை பார்ப்போம்.
ஏனெனில் கடந்த 15 வருடங்களுக்கும் இந்தியாவுக்காக 3 வருடமான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர்கள் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்கள். தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். இங்கிருந்து 2027 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வெற்றியுடன் விடை பெறுவதே அவர்களுடைய விருப்பமாக இருக்கிறது.
2026 புத்தாண்டில் விராட், ரோஹித்:
ஆனால் அதற்கு முன் வயதைக் காரணமாக வைத்து அவர்களை தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முயற்சித்து வருகிறார்கள். இருப்பினும் அதற்கு இடம் கொடுக்காமல் களத்தில் சிறப்பாக விளையாடி வரும் விராட், ரோஹித் ஐசிசி தரவரிசையில் டாப் 2 பேட்ஸ்மேன்களாக முன்னேறி பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த பதிலடி பயணத்தில் இந்த வருடம் அவர்கள் முதலாவதாக நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர்.
அந்தப் போட்டிகள் ஜனவரி 11, 14, 18 முறையே வதோதரா, ராஜ்கோட், இந்தூர் ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. அதன் பின் வரும் ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர்கள் விளையாட உள்ளனர். அதை அடுத்து வரும் ஜூலை மாதம் 14, 16, 19 ஆகிய தேதிகளில் முறையே பர்மிங்காம், கார்டிப், லார்ட்ஸ் மைதானங்களில் இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்காக விராட், ரோஹித் களமிறங்க உள்ளனர்.
21 போட்டிகள்:
அடுத்ததாக செப்டம்பர் மாதம் வங்கதேச மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்தப் போட்டிகளிலும் அவர்கள் விளையாடுவார்கள் என்று நம்பலாம். பின்னர் அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 3 ஒருநாள் போட்டிகளில் அவர்கள் விளையாடுவார்கள் என்று நம்பலாம்.
இதையும் படிங்க: டி20 உலககோப்பை அணியில் தேர்வாகாத ஜிதேஷ் சர்மா.. ஆர்.சி.பி அணி கொடுத்த ரியாக்ஷன் – விவரம் இதோ
அடுத்ததாக நவம்பர் மாதம் நியூசிலாந்து மண்ணிலும் டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் தலா 3 போட்டிகள் கொண்ட தொடரில் அவர்கள் விளையாட உள்ளனர். அந்த வகையில் 2026 வருடத்தில் இந்தியா 21 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த அனைத்து போட்டிகளிலும் விராட், ரோஹித் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



