ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த பிரம்மாண்ட டி20 உலக கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது.
ஜிதேஷ் சர்மாவுக்கு ஆதரவாக ஆர்.சி.பி அணி வெளியிட்ட பதிவு :
இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்ட வேளையில் சூரியகுமார் யாதவின் தலைமையின் கீழ் 15 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இந்திய அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷன் மாற்று துவக்க வீரராக இடம் பெற்றுள்ளார்.
சமீப காலமாகவே மோசமான பேட்டிங் காரணமாக தடுமாறி வந்த அவர் நீக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக மீண்டும் சஞ்சு சாம்சன் துவக்க வீரராக இடம் பிடித்துள்ளார். இதன் காரணமாக அவரே இந்த டி20 உலக கோப்பை தொடரின் துவக்க வீரராக விளையாடுவார். ஒருவேளை அவருக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் மாற்று விக்கெட் கீப்பராக இடம் பிடித்திருக்கும் இஷான் கிஷன் விளையாட அதிக வாய்ப்புள்ளது.
இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னர் வரை சஞ்சு சாம்சனுக்கு பேக்கப் வீரராக ஜிதேஷ் சர்மாவே இந்தியா டி20 அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வந்தார். அதிலும் குறிப்பாக சஞ்சு சாம்சன் சில போட்டிகளில் விளையாடாத வேளையில் ஜிதேஷ் சர்மாவே இந்திய அணியின் பினிஷர் ரோலில் களமிறங்கி விளையாடி வந்தார்.
இதன் காரணமாக டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவரே பேக்கப் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷனை தேர்வு செய்த இந்திய அணியின் நிர்வாகம் ஜிதேஷ் சர்மாவை கழட்டிவிட்டது.
இதையும் படிங்க : டி20 வேர்ல்டுகப்புக்கு முன்னாடி சூரியகுமார் யாதவ் இதை கன்பார்ம் பண்ணி ஆகனும் – சீக்கா கருத்து
இந்நிலையில் ஜிதேஷ் சர்மா இப்படி டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட பின்னர் அவரை ஆதரிக்கும் வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. அந்தவகையில் வெளியான பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : ஜிதேஷ் சர்மாவின் ஹீரோயிசத்தை இந்த ஐபிஎல் தொடரில் பார்ப்பீர்கள். இந்த ஐபிஎல் தொடருக்காக காத்திருக்க முடியவில்லை என ஆர்.சி.பி நிர்வாகம் அவரை ஆதரித்து அந்த பதிவினை வெளியிட்டுள்ளது.



