சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 10-ஆம் தேதியான இன்று நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் போட்டியானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ரிஷப் பண்ட் தலைமையான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும் மோதி வருகின்றன.
ஜெய்ஸ்வாலின் சாதனையை சமன் செய்த உர்வில் படேல் :
அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்களை குறித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக ஜாஷ் இங்கிலீஷ் 85 ரன்களையும், சபாஷ் அகமது 43 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 24 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்தி தற்போது சி.எஸ்.கே அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் விக்கெட்டாக சஞ்சு சாம்சன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய வேளையில் மூன்றாவது வீரராக உர்வில் படேல் களமிறங்கினார்.
அப்படி 3 ஆவது வீரராக களம்புகுந்த உர்வில் படேல் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் மாபெரும் சாதனை ஒன்றினை ஐ.பி.எல் போட்டிகளில் சமன் செய்து அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இன்றைய போட்டியின் போது 3 ஆவது வீரராக களமிறங்கிய அவர் முதல் பந்தியிலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .
இதையும் படிங்க : லக்னோ அணிக்கெதிரான போட்டியில் 2 விக்கெட் எடுத்ததன் மூலம் மீண்டும் முதலிடத்திற்கு வந்த – சி.எஸ்.கே பவுலர்
இந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்திருந்தபோது 7 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரராக முதலிடத்தில் இருந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இன்றைய போட்டியில் உர்வில் படேலும் 13 பந்துகளில் அரைசதம் அடித்து அவரது சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



