லக்னோ அணிக்கெதிரான போட்டியில் 2 விக்கெட் எடுத்ததன் மூலம் மீண்டும் முதலிடத்திற்கு வந்த – சி.எஸ்.கே பவுலர்

Anshul Kamboj
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன.

மீண்டும் முதலிடத்தை பிடித்த சி.எஸ்.கே பவுலர் :

அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது.

- Advertisement -

லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக ஜாஸ் இங்கிலீஸ் 85 ரன்களையும், சபாஷ் அகமது 43 ரன்களையும் குவித்தனர். சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ஜெமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளையும், அன்ஷூல் கம்போஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

அதனை தொடர்ந்து தற்போது 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சி.எஸ்.கே அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அன்ஷுல் கம்போஜ் 4 ஓவர்கள் பந்துவீசி 47 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தாலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் கேப்டன் பதவி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சஞ்சு சாம்சன் – வெளிப்படையான பதில்

இதன்மூலம் இந்த நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தி நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக முதலிடம் பிடித்து ஊதா தொப்பியை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement