இந்தியாவில் நடைபெற்று வந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை காணாத மிகப்பெரிய சரிவினை சந்தித்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்தாண்டு 12 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே 9 தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. மேலும் இந்த தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் பிளே ஆஃப் வாய்ப்பை தவற விட்டுள்ளது.
வரலாற்று சாதனையை நிகழ்த்திய உர்வில் பட்டேல் :
இந்த 2025 ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு படுமோசமாக அமைந்ததால் கடந்த சில போட்டிகளாகவே இளம் வீரர்களுக்கு அதிகளவு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் கடைசியாக சிஎஸ்கே அணி விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது 26 வயதான குஜராத்தை சேர்ந்த இளம் வீரர் உர்வில் பட்டேலிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஏற்கனவே சென்னை அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பெற்ற வன்ஷ் பேடி காயம் காரணமாக வெளியேறிய வேளையில் அவருக்கு மாற்று வீரராக அணிக்குள் வந்த உர்வில் பட்டேல்-க்கு சென்னை அணியில் இணைந்த முதல் போட்டியிலேயே அறிமுக வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தனக்கு கிடைத்த அறிமுக வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய அவர் 11 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 31 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவரது இந்த சிறப்பான அதிரடி ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கும் உதவியிருந்தது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் விளையாடி இருந்தாலும் தனது அறிமுக போட்டியிலேயே வரலாற்று சாதனை ஒன்றிணையையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் சென்னை அணிக்காக அறிமுகமான முதல் போட்டியில் 11 பந்துகளை சந்தித்த அவர் 281 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 31 ரன்கள் குவித்திருந்தார். இதன் மூலம் ஐபிஎல் அறிமுக போட்டியில் 10 பந்துகளுக்கு மேல் சந்தித்து அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடிய வீரர் என்ற சாதனையில் அவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : சுப்மன் கில்லை நகத்திட்டு அந்த இடத்தில் கருண் நாயருக்கு வாய்ப்பு குடுக்கனும் – வலுக்கும் ஆதரவு
இதற்கு முன்னதாக டெல்லி வீரர் விப்ராஜ் நிகம் இந்த ஆண்டு லக்னோ அணிக்கு எதிராக அறிமுகமான போட்டியில் 15 பந்துகளில் 260 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 39 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்த வேளையில் அவரது அந்த சாதனை உர்வில் பட்டேல் முறையடித்து சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.