கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடராஜனுக்கு பதிலாக அணியில் இணைந்த மாற்று வீரர் – யார் தெரியுமா ?

Nattu-2
- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஆஸ்திரேலிய தொடருக்ககான இந்திய அணியில் தேர்வானது மட்டுமின்றி இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரிலும் கலந்துகொண்டு விளையாடினார்.

Nattu

- Advertisement -

ஆனால் இந்த தொடரின் பாதியில் காயமடைந்த அவர் தொடரில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்ட அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தில் கலந்து கொண்டு விளையாட இருந்தார். இந்நிலையில் முதல் போட்டி துவங்கும் முன்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். அவருடன் சேர்ந்து மேலும் 6 வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடராஜனுக்கு பதிலாக மாற்று வீரரை தற்காலிகமாக தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு சன்ரைசர்ஸ் அணி தள்ளப்பட்டது.

umran

அதன்படி தற்போது நடராஜனுக்கு பதிலாக மாற்று வீரர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உம்ரான் மாலிக் என்பவரை அந்த அணி தேர்வு செய்துள்ளது. இவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற சன் ரைசர்ஸ் அணியின் நெட் பவுலராக சென்றிருந்த நிலையில் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடராஜன் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டால் சில வாரங்களுக்குப் பிறகு அணியில் இணையும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement