- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனி மாதிரி விராட், ரோஹித்துக்கும் இந்த கெளரவத்தை கொடுங்க.. பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வென்றது. கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் அசத்திய இந்தியா இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது ரசிகர்களுக்கு மறக்க முடியாததாக அமைந்தது.

அந்த வெற்றியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். குறிப்பாக பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் ரோகித் சர்மா மற்றும் ஆகியோர் ஓய்வு பெற்றது பல ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் கடந்த 10 வருடங்களாக அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

- Advertisement -

ரெய்னா கோரிக்கை:
அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 2 பேட்ஸ்மேன்களாகவும் அவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். இருப்பினும் 35 வயதை கடந்த அவர்கள் காலத்திற்கும் விளையாட முடியாது என்பதை உணர்ந்து இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் அவர்களுக்கு பிரியாத மனதுடன் விடை கொடுத்தனர்.

இந்நிலையில் எம்எஸ் தோனியை போல ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் ஜெர்சிக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்க வேண்டும் என்று சுரேஷ் என கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜெர்சி எண் 18 மற்றும் 45 ஆகியவற்றுக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தங்கள் அலுவலகத்தில் இந்த ஜெர்சி எண்களை வைத்திருக்கும் ஒரு சிறப்பு சந்தர்ப்பம் வேண்டும்”

- Advertisement -

“7வது நம்பர் ஜெர்சி ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளது. அதே போல நம்பர் 18 மற்றும் 45க்கும் அவர்கள் இதை செய்ய வேண்டும். அந்த எண்களைப் பார்க்கும் ஒவ்வொரு நபரும் உந்துதல் பெற வேண்டும். ஏனெனில் 18 மற்றும் 45 ஆகிய நம்பர்கள் கடினமான சூழ்நிலைகளில் இருந்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளது”

இதையும் படிங்க: 125 கோடி போக ஸ்பெஷல் பரிசை அறிவித்த மகாராஷ்டிரா அரசு.. சட்டசபையில் சூர்யகுமாரை கலாய்த்த ரோஹித்

“எனவே வருங்காலத்தில் எந்த வீரர்கள் இந்திய அணியில் வந்தாலும் அந்த எண்களை பார்த்து உத்வேகத்தை பெற வேண்டும்” என்று ஜியோ சினிமா சேனலில் பேசினார். முன்னதாக இந்திய வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் (10) மற்றும் எம்எஸ் தோனி (7) ஆகியோரின் ஜெர்ஸிகளுக்கு மட்டுமே ஓய்வு கொடுக்கப்பட்டு கெளரவம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அதை ரோஹித் மற்றும் விராட் கோலிக்கும் கொடுக்க வேண்டும் என்று ரெய்னா கேட்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -