IND vs AUS : இந்தியா ஆஸ்திரேலியா டி20 தொடரில் இருந்து விலகிய 3 நட்சத்திர வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு

indvsaus
Advertisement

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து முன்னணி அணிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. இதற்காக கடந்த ஒரு வருடமாக பல்வேறு இருதரப்பு தொடர்களில் விளையாடி தரமான வீரர்களை கண்டறிந்த அந்தந்த நாடுகள் உலக கோப்பையில் களமிறங்கும் தங்களுடைய அணிகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா தங்களுடைய அணியை அனைவருக்கும் முன்னோடியாக முதல் ஆளாக அறிவித்தது.

aus 1

வரலாற்றில் 5 50 ஓவர் உலக கோப்பைகளை அசால்ட்டாக வென்று கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக திகழும் ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையை மட்டும் வெல்ல முடியாமல் தவித்து வந்தது. அந்த கதைக்கு கடந்த வருடம் துபாயில் ஆரோன் ஃபின்ச் தலைமையில் அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலியான முதல் முறையாக கோப்பையை வென்று முற்றுப்புள்ளி வைத்து சாதனை படைத்தது. அதனால் இம்முறை தங்களது நாட்டில் உலக கோப்பை நடைபெறுவதால் சொந்த மண் மற்றும் ரசிகர்களின் ஆதரவுடன் பலத்துடன் களமிறங்கும் அந்த அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் 22ஆம் தேதி முதல் உலக கோப்பையில் களமிறங்கும் அந்த அணி அதற்கு முன்பாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. தங்களுக்கு நிகரான பலத்தையும் தற்சமயம் நம்பர் ஒன் டி20 அணியாகவும் இருப்பதால் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Ind vs Aus

3 வீரர்கள் காயம்:
அதில் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்த சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் அதிரடி ஆல் ரவுண்டர் டிம் டேவிட் முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்காக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த அணியை அறிவித்த பின் சமீபத்தில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முறையே 2 – 1 (3) மற்றும் 3 – 0 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்று அசத்தியது.

- Advertisement -

இருப்பினும் அந்த தொடர்களின் போது நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முழங்காலில் காயத்தை சந்தித்தார். அதே போல் கடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற நம்பிக்கை நட்சத்திர ஆல்-ரவுண்டர் மிட்சேல் மார்ஷ் கணுக்கால் காயத்தை சந்தித்தார். அது போக மற்றொரு நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் பக்கவாட்டு காயத்தைச் சந்தித்தார். இப்படி அடுத்தடுத்த தொடர்களில் தூண்களாக கருதப்படும் 3 முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்தது ஆஸ்திரேலியாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆனாலும் அவர்களது காயத்தை சோதித்து பார்த்ததில் சிறிய அளவில் இருப்பதால் உலகக் கோப்பைக்கு முன்பாக அவர்களை விளையாட வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பாத ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் இந்த டி20 தொடரில் அவர்களுக்கு தாமாக முன்வந்து முழுமையான ஓய்வளித்துள்ளது. மேலும் அவர்களுக்கு பதில் டேனியஸ் சாம்ஸ், சீன் அபோட் மற்றும் நாதன் எலிஸ் ஆகிய 3 இளம் வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவார்கள் என்றும் ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி:
இதை தொடர்ந்து இந்தியாவில் நடைபெறும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி செப்டம்பர் 15ஆம் தேதியன்று இந்தியாவுக்கு தனி விமானம் வாயிலாக சென்றடைய உள்ளது. அதன் பின் வரும் செப்டம்பர் 20, 23, 25 ஆகிய தேதிகளில் முறையே மொஹாலி, நாக்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் டி20 தொடரில் பங்கேற்கும் அந்த அணி அதற்கு முன்பாக தீவிர வலைப் பயிற்சியிலும் ஈடுபட உள்ளது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை : பயிற்சி ஆலோசகராக மைக்கல் ஹஸ்ஸியை நியமித்த நட்சத்திர அணி – கப் ஜெயிக்க புதிய திட்டம்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி: ஆரோன் பின்ச் (கேப்டன்), சீன் அபோட், அஸ்டன் அகர், பட் கமின்ஸ், டிம் டேவிட், நேதன் எலிஸ், கேமரூன் கிரீன், ஷோஸ் ஹேசல்வுட், ஜோஸ் இங்கிலிஷ், கிளன் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மேத்தியூ வேட், ஆடம் ஜாம்பா.

Advertisement