டி20 உலககோப்பை : பயிற்சி ஆலோசகராக மைக்கல் ஹஸ்ஸியை நியமித்த நட்சத்திர அணி – கப் ஜெயிக்க புதிய திட்டம்

Hussey
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரினை வென்ற ஆஸ்திரேலிய அணி நடப்புச் சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்குவதால் இம்முறை அந்த அணிக்கு கூடுதல் சாதகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு அவர்களது அணியில் உள்ள வீரர்களும் நல்ல பார்மில் இருப்பதால் ஆஸ்திரேலிய அணி கோப்பையை தக்கவைக்க நினைக்கும்.

aus 1

- Advertisement -

அதே வேளையில் மற்ற அணிகளும் இம்முறை உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற வேண்டும் என்கிற கண்ணோட்டத்தில் பல்வேறு மாற்றங்களை தங்களது அணியில் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகமானது இம்முறை ஜாஸ் பட்லர் தலைமையில் உலகக்கோப்பை தொடரை அணுகுகிறது.

சமீபத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வினை அறிவித்ததால் பட்லரின் தலைமையில் இங்கிலாந்து அணி வெற்றிநடை போட்டுவருகிறது. அதுமட்டும் இன்றி ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் ஹஸ்ஸியை பயிற்சி ஆலோசகராக பணியாற்ற அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Eng

நிச்சயம் மைக்கல் ஹஸ்ஸியின் வருகை இங்கிலாந்து அணிக்கு பெரிய பலத்தை அளிக்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் உறுதியாக நம்புகிறது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்காக நிறைய அனுபவம் உடைய மைக்கல் ஹஸ்ஸி ஆஸ்திரேலியா ஆடுகளங்களிலும் நன்றாக விளையாடிய அனுபவம் உடையவர்.

- Advertisement -

மிஸ்டர் கிரிக்கெட் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சி ஆலோசகராக மைக்கல் ஹஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளது ஆஸ்திரேலிய மைதானங்களில் இங்கிலாந்து வீரர்கள் விளையாட பெருமளவு உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இந்த டி20 உலகக்கோப்பை தான் அந்த 3 இந்திய வீரர்களுக்கும் கடைசி தொடராம் – அடுத்து விளையாட வாய்ப்பில்லை

இந்த உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்றடைந்ததும் அந்த அணி வீரர்களுடன் மைக்கல் ஹஸ்ஸி இணைந்து பணியாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement