இந்த டி20 உலகக்கோப்பை தான் அந்த 3 இந்திய வீரர்களுக்கும் கடைசி தொடராம் – அடுத்து விளையாட வாய்ப்பில்லை

IND
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட இந்திய அணியானது இம்முறை உலக கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்கிற எண்ணத்தோடு ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.

IND

- Advertisement -

நிச்சயம் இம்முறை இந்த வீரர்களைக் கொண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி அறிவித்துள்ள இந்த 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள மூன்று வீரர்களுக்கு நிச்சயம் இதுதான் கடைசி உலக கோப்பை வாய்ப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு தற்போது 35 வயது ஆகிறது. டெஸ்ட் பவுலராக மட்டுமே இந்திய அணியில் பார்க்கப்பட்டு வந்த அஷ்வின் கடந்த ஆண்டு இந்திய அணிக்காக மீண்டும் டி20 கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Ravichandran Ashwin

அதன் காரணமாக இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் நிச்சயம் அடுத்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோன்று மற்றொரு தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் இந்த டி20 உலக கோப்பை தான் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் தற்போது 37 வயதாகும் இவருக்கு அடுத்த டி20 உலக கோப்பைக்குள் 39 வயது ஆகிவிடும் என்பதனால் அடுத்த டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் விளையாடுவதும் கடினம். மேலும் கூடுதல் வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள முகமது ஷமிக்கு தற்போது 32 வயதாகிறது.

இதையும் படிங்க : ஏபிடி விக்கெட் எடுத்தும் திட்டுனாரு, அது மட்டும் நடந்திருந்தால் – தோனி மீது இந்திய வீரர் ஆதங்கம்

அதனால் அவரது வயதினை சுட்டிக்காட்டி அவரும் அடுத்த உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து அவரை இந்திய அணி ஓரம் கட்டி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க இருக்கிறது என்று அவரிடமே தெரிவித்து விட்டதால் நிச்சயம் இம்முறை தான் அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement