ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவாரா? – வெளியான அப்டேட்

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டி20 இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி இருந்த அவர் 5 போட்டிகளில் பணிச்சுமை காரணமாக மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி இருந்தார்.

ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவாரா? :

அடிக்கடி அவருக்கு காயம் ஏற்படுவதன் காரணமாக அவரது பணிச்சுமையை தீவிரமாக கண்காணித்து வரும் நிர்வாகமானது முக்கிய போட்டிகளில் மட்டுமே அவரை விளையாட வைக்கும் என்பதனால் எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை தொடரில் அவர் முழு தொடரிலும் விளையாடுவாரா? என்ற கேள்வியே பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.

- Advertisement -

எதிர்வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து தங்களது முதல் லீக் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கும் வேளையில் தற்போது இந்திய அணியின் வீரர்களுடன் இணைந்து வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் ஜஸ்ப்ரீத் பும்ரா பணிச்சுமை காரணமாக விளையாடுவாரா? அல்லது ஒரு சில போட்டிகளில் ஓய்வு எடுத்துக்கொள்வாரா? என்பது குறித்த சில முக்கிய அப்டேட்கள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த வகையில் இந்திய அணியின் நிர்வாகம் தற்போது பும்ராவை தீவிரமாக கண்காணித்து வருவதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

தற்போது பும்ரா நல்ல உடற்தகுதியுடன் சிறப்பாக பயிற்சி செய்து வந்தாலும் இந்த ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என்றே கூறப்படுகிறது. ஆனாலும் முக்கிய போட்டிகளில் பெரிய அணிகளான பாகிஸ்தான், ஸ்ரீலங்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ரா இல்ல.. டி20 கிரிக்கெட்ல இந்த பவுலர் தான் பீக் பார்ம்ல இருக்காரு – ரவி சாஸ்திரி கருத்து

ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் கூறுகையில் : ஜஸ்ப்ரீத் பும்ராவின் உடற்தகுதியை கருத்தில் கொண்டு அவர் முறையான பெரிய போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement