ஐக்கிய அரபு அமீரகத்தில் 8 நாடுகள் பங்கேற்று விளையாட இருக்கும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் செப்டம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
பும்ராவை விட அந்த பவுலர் செம பார்ம்ல இருக்காரு : ரவி சாஸ்திரி
முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து விளையாட இருக்கும் இந்திய அணியானது அடுத்ததாக செப்டம்பர் 14-ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்தும், அதன்பிறகு செப்டம்பர் 19-ஆம் தேதி ஓமன் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. லீக் சுற்றில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும்.
அதன் பின்னர் சூப்பர் 4 சுற்றில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் இந்திய அணி தகுதிபெற வாய்ப்புள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் மிகச் சிறப்பான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்திய அணியே கோப்பையை கைப்பற்றும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்த தொடரினை பொறுத்தவரை இந்திய அணியின் பந்துவீச்சு துறையில் : ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் பும்ராவை காட்டிலும் குல்தீப் யாதவ் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை டி20 போட்டிகளில் தற்போது குல்தீப் யாதவ் மிகச்சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் அட்டகாசமாக செயல்பட்ட அவர் இங்கிலாந்து தொடரில் விளையாடாதது வருத்தம் தான். இருந்தாலும் இந்த ஆசிய கோப்பை தொடரில் அவர் அசத்துவார் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : இதுமட்டும் நடந்தா சூரியகுமார் யாதவுக்கு ஆப்பு தான்.. பதவி சுப்மன் கில்லுக்கு போயிடும் – மான்டி பனேசர் கருத்து
அதேபோல் வருண் சக்ரவர்த்தியும், அக்சர் பட்டேலும் கூட பந்துவீச்சில் சிறப்பாக கை கொடுப்பார்கள் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். கடைசியாக 2024 டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடியிருந்த குல்தீப் யாதவ் அதன்பிறகு ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.



