இதுமட்டும் நடந்தா சூரியகுமார் யாதவுக்கு ஆப்பு தான்.. பதவி சுப்மன் கில்லுக்கு போயிடும் – மான்டி பனேசர் கருத்து

Monty Panesar
- Advertisement -

எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை செப்டம்பர் 9-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகமாக துவங்க உள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது தங்களது முதலாவது லீக் போட்டியில் செப்டம்பர் 20-ஆம் தேதி துபாய் மைதானத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

சூரியகுமார் யாதவின் பதவிக்கு வரும் ஆபத்து : மான்டி பனேசர்

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த இருக்கிறார். அதோடு எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் அவரே இந்திய அணியை வழி நடத்துவார் என்பதனால் இந்த ஆசிய கோப்பை தொடரானது சூரியகுமார் யாதவுக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.

- Advertisement -

டி20 போட்டிகளை பொருத்தவரை சூரியகுமார் யாதவ் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார் என்றே கூறலாம். ஏனெனில் ரோகித் சர்மாவிற்கு பிறகு முழுநேர டி20 கேப்டனாக பொறுப்பேற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி இதுவரை 22 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த 22 போட்டிகளில் 18 வெற்றிகளையும் நான்கு தோல்விகளையும் மட்டுமே பெற்றுள்ளது.

இதனால் சூரியகுமார் யாதவ் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தியுள்ளார் என்று கூறலாம். ஆனாலும் சுப்மன் கில்லின் வருகையால் சூரியகுமார் யாதவின் பதவிக்கு ஆபத்து இருப்பதாக பலரும் பேசி வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மான்டி பனேசர் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் ஒரு பேட்ஸ்மேனாகவோ அல்லது கேப்டனாகவோ சோபிக்க தவறினால் தேர்வாளர்கள் சுப்மன் கில் பக்கம் நகர்வார்கள் என்ற கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் அசத்த தவறினாலோ அல்லது இந்திய அணி இந்த ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை என்றாலோ தேர்வாளர்கள் சுப்மன் கில்லை நோக்கி நகர்ந்து விடுவார்கள்.

இதையும் படிங்க : சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆனதில் இருந்து இந்த குறை இருக்கு.. அதை அவர் மாத்தனும் – வாசிம் அக்ரம்

ஏனெனில் ஏற்கனவே டெஸ்ட் கேப்டன் பதவியை பெற்றுள்ள சுப்மன் கில் அடுத்து ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாகவும் மாற்றப்பட இருக்கிறார் என்ற செய்திகளை நான் கேட்டு வருகிறேன். இந்நிலையில் தற்போது டி20 போட்டிகளிலும் சூரியகுமார் யாதவ் அசத்த தவறினால் மூன்று வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக சுப்மன் கில் மாறுவார். அந்த திறன் அவரிடம் உள்ளது என மான்டி பனேசர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement