
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு நாடு திரும்பியுள்ளது. அதற்கு அடுத்து இந்திய அணியானது உடனடியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
அந்த வகையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. சுப்மன் கில் தலைமையில் இந்த டெஸ்ட் அணியில் 15 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக தற்போது டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். அக்டோபர் 2-ஆம் தேதி அகமதாபாத்தில் முதல் டெஸ்ட் போட்டியானது துவங்க இருக்கிறது. அதன்பின்னர் அக்டோபர் 10-ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டெல்லி அருண் ஜேட்லீ மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது சொந்த மண்ணில் நடைபெற இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? போட்டி எத்தனை மணிக்கு துவங்கும்? என்பது குறித்த ஒளிபரப்பு தகவல்களை இங்கு காணலாம்.
அந்த வகையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியை ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும நிறுவனம் வாங்கியுள்ளதால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் இந்த தொடரை கண்டு களிக்கலாம். இந்தியா முழுவதும் இந்த தொடரானது பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இதையும் படிங்க : 83க்கு அவுட்.. நேபாள் உலக சாதனை வெற்றி.. வெஸ்ட் இண்டீஸ் அணி மோசமான உலக சாதனை
ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் இந்த தொடரை ரசிக்கலாம். அதோடு ஆன்லைன் மூலமாக இந்த தொடரினை காண விரும்புவோர் ஹாட் ஸ்டார் செயலி மூலம் காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி போட்டிகள் காலை 9:30 மணிக்கு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.