83க்கு அவுட்.. நேபாள் உலக சாதனை வெற்றி.. வெஸ்ட் இண்டீஸ் அணி மோசமான உலக சாதனை

WI vs NEP 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாள் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடைபெறுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக தோற்கடித்த நேபாள் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அடுத்ததாக வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 2வது போட்டி செப்டம்பர் 29ஆம் தேதி சார்ஜாவில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நேபாள் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் சிறப்பாக விளையாடிய 173/6 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆசிப் ஷேக் 68* (47), சுதீப் ஜோரா 63 (39) ரன்கள் அடித்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஆகில் ஹுசைன் 2, கெய்ல் மேயர்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

நேபாள் வெற்றி:

அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பம் முதலே திண்டாட்டமாக பேட்டிங் செய்து ரன்கள் குவிக்கத் திணறியது. அந்தளவுக்கு நேபாள் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி வெஸ்ட் இண்டீஸ் அணியை அடிக்க விடாமல் செய்தனர். அதனால் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் இழந்த வெஸ்ட் இண்டீஸ் 17.1 ஓவரில் 83 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 21 ரன்கள் எடுத்த நிலையில் நேபாள் அணிக்கு அதிகபட்சமாக கௌசல் புர்டேல் 3, முகமத் ஆலம் 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 90 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற நேபாள் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே நேபாள் வென்றது. அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக நேபாள் முதல் முறையாக ஒரு தொடரை வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மோசம்:

அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முழு உறுப்பு நாட்டு அணிக்கு எதிராக பெரிய வெற்றியைப் பெற்ற இணை உறுப்பு நாடாகவும் நேபாள் உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2016ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனை. மறுபுறம் 2012, 2016 டி20 உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி நேபாள் போன்ற கத்துக்குட்டியிடம் அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: இந்த பாகிஸ்தான் தலைவரா ஜென்டில்மேன்? இந்தியா ஐசிசியிடம் புகார் செய்யும்.. பிசிசிஐ செயலாளர் பேட்டி

அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இணை உறுப்பு நாட்டு அணிக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோர் (83) பதிவு செய்த முழு உறுப்பு நாட்டு அணி என்ற மோசமான உலக சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைத்துள்ளது. இதற்கு முன் 2014 டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியிடம் இங்கிலாந்து 88 ரன்களுக்கு சுருண்டதே முந்தைய குறைந்தபட்ச ஸ்கோர்.

Advertisement