3 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம்பிடித்து 2 இன்னிங்சிலும் சதம் அடித்த ஆஸி வீரர் – அசத்தலான ஆட்டம்

Khawaja-1
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த வேளையில் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது சிட்னி நகரில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அதன்படி இந்த போட்டியின் கடைசி இன்னிங்சில் இங்கிலந்து அணியின் வெற்றிக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

aus vs eng

- Advertisement -

இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றிபெற அதிகமான வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்படவே 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பை உஸ்மான் கவாஜா பெற்றிருந்தார்.

ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக களம் இறங்கி வந்தார். இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2887 ரன்களை குவித்துள்ளார். இருப்பினும் அவரது பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர் 2019 ஆண்டுக்குப் பின்னர் அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார்.

khawaja

தற்போது தவிர்க்க முடியாத நிலையில் அணியில் இணைந்த கவாஜா இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். முதல் இன்னிங்சில் 137 ரன்களை குவித்த கவாஜா 2-வது இன்னிங்சிலும் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக தற்போது ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு அருகில் உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஷஸ் தொடரில் நடைபெற்ற சுவாரசியம். வர்ணனையாளராக மாறிய ஆஸ்திரேலிய பிரதமர் – நடந்தது என்ன?

இந்நிலையில் இப்படி சிறப்பாக விளையாடும் ஒரு வீரரையா மூன்று ஆண்டுகள் அணியில் எடுக்காமல் வைத்திருந்தீர்கள் என்பதுபோல ரசிகர்கள் இந்த செய்தியை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement