ஆஷஸ் தொடரில் நடைபெற்ற சுவாரசியம். வர்ணனையாளராக மாறிய ஆஸ்திரேலிய பிரதமர் – நடந்தது என்ன?

Morrison
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றி உள்ள வேளையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியும் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாகவே தற்போது இருந்து வருகிறது. இந்த போட்டியின் 4 நாட்கள் முடிவடைந்துள்ள வேளையில் ஐந்தாவது நாளில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 358 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது.

aus vs eng

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை பார்க்க வந்திருந்த ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் திடீரென வர்ணனையாளர் அறைக்குச் சென்று தானும் கமன்டேட்டராக மாறி திடீரென மைக்கை பிடித்து வர்ணனை செய்ய ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி கில்கிறிஸ்ட் மற்றும் ஈசா குஹா ஆகியோருடன் இணைந்து சில நிமிடங்கள் அவர் போட்டியை வர்ணனையும் செய்தார்.

இப்படி ஒரு நாட்டின் பிரதமரே நேரடியாக வர்ணனையாளர் அறைக்கு சென்று போட்டியை வர்ணனை செய்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. போட்டியின் நேரலையில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில் :

Morrison 1

இங்கு இந்த போட்டியை வர்ணனை செய்வதை நான் மிக சிறப்பாக பார்க்கிறேன். இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான மக்கள் வந்துள்ளனர். மெக்ராத் தலைமையின் கீழ் செயல்படும் கேன்சர் அறக்கட்டளை நிறுவனத்திற்காக இந்த பிங்க்பால் டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது. அவரது இந்த நல்ல நோக்கம் மென்மேலும் தொடரவேண்டும். அதில் நானும் ஒரு பங்காற்றி இருப்பதில் மிகப் பெரும் மகிழ்ச்சி.

- Advertisement -

இதையும் படிங்க : தோக்கப்போறோம்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் எதுக்கு இதெல்லாம் – சிராஜ், ஷர்துல் செய்த தேவையில்லா வேலை

எங்களுடைய அரசும் அவரது அறக்கட்டளைக்கு எப்போதும் ஆதரவளித்து வருகிறது. ஆஸ்திரேலியர்கள் மட்டுமல்லாமல் இந்த பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று வரும் அனைத்து அணிகளுக்கும், இந்த போட்டியை சப்போர்ட் செய்பவர்களுக்கும் நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் கமெண்டரி செய்த சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement