தோக்கப்போறோம்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் எதுக்கு இதெல்லாம் – சிராஜ், ஷர்துல் செய்த தேவையில்லா வேலை

Bowler
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை ஓன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அடுத்து வரும் 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

INDvsRSA

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியின் போது இந்திய வீரர்கள் தென்ஆப்பிரிக்க வீரர்களிடம் தொடர்ந்து சண்டையிடுவதும், வார்த்தை போரில் ஈடுபடுவதும், ஸ்லெட்ஜிங் செய்வது என ஆக்ரோஷமாகவே இருந்தனர். அதுவும் போட்டியின் கடைசி நாளன்று அது மிகவும் அதிகமாக இருந்தது. அதனை நீங்களும் கவனித்திருக்க வாய்ப்புள்ளது.

அதிலும் குறிப்பாக போட்டி ஆரம்பித்ததிலிருந்தே ரிஷப் பண்ட் – வேண்டர்டுசைன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா – யான்சென் ஆகியோரது பிரச்சனை மைதானத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து போட்டியின் கடைசி நாளான நான்காவது நாளில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் நடந்துகொண்ட விதம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Elgar

ஏனெனில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது பந்து வீசிய தாகூர் மற்றும் சிராஜ் ஆகியோர் தேவையில்லாமல் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை வம்புக்கு இழுத்தனர். அதிலும் குறிப்பாக சிராஜ் தொடர்ச்சியாக கேப்டன் டீன் எல்கர்-ஐ வம்புக்கு இழுத்தார். அதோடு பவுமாவிடமும் முறைத்தபடி ஏதோ பேசினார். அதுமட்டுமின்றி ஷர்துல் தாகூர் பந்துவீசும் போது பேட்ஸ்மேன்களுடன் தொடர்ந்து தேவையில்லாத உரையாடல்களை செய்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆட்டோகிராப் போட்ட தனது சி.எஸ்.கே ஜெர்சியை பாகிஸ்தான் வீரருக்கு பரிசாக அளித்த தோனி – யாருக்கு தெரியுமா?

அவர்கள் இருவருமே பேட்ஸ்மேன்களின் கவனத்தை திருப்பினர். ஆனால் இது தேவையில்லாத ஒன்று என்றும் வெற்றிக்கு தென்ஆப்பிரிக்க வீரர்கள் நெருங்கியதும் அவர்கள் விளையாடிய விதத்தை பாராட்டிவிட்டு அடுத்த போட்டிக்கு நகர்ந்திருக்க வேண்டும். அதை விடுத்து இது போன்ற தேவையில்லாத செயல்கள் பிரயோஜனம் இல்லாத ஒன்று என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement